ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

நித்தியானந்தாவுக்கு ஒரு கைலாசா! சத்துக்குரு ‘ஜக்கி’க்கு?!

19 மணி நேரங்களுக்கு முன்பு வெளியான நக்கீரன் ஊடகத்தின் ‘காணொலி’யில், கடவுள்களின் கடவுளான ‘ஜக்கி’ வாசுதேவன் பற்றிய அதிர்ச்சியூட்டும் புத்தம் புதிய தகவல்களை அறிய நேர்ந்தது.


ஈஷா மையத்தில், ஜக்கிக்கு ‘எல்லாமும்’ ஆக இருந்த ‘அந்த’ அம்மணி, ஜக்கியின் செல்ல மகள் ‘ராதே’வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஈஷாவிலிருந்து வெளியேறிவிட்டார்.

அவர், தன்னைப் பற்றிய அறியப்படாத தகவல்களை அம்பலப்படுத்தக்கூடும் என்று ஜக்கி அஞ்சுகிறாராம்.





அதோடுகூட, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனக்கு எதிரான மனநிலையில்[இதன் காரணமாகத்தான் கர்னாடகாவிலும், நேப்பாளம் காட்மண்டுவிலும் ஈஷா கிளைகளை ஜக்கி நிறுவியுள்ளாராம்] இருப்பதும் ஜக்கியின் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நக்கீரன் கோபால் சொல்கிறார். வேறு சில காரணங்களையும் அவர் காணொலியில் பதிவு செய்துள்ளார்.

மேற்கண்ட காரணங்களால், மண் வளம் காப்பதாகவும், காடுகள் வளர்ப்பதாகவும், காவேரி அன்னையைக் காப்பாற்றுவதாகவும் சொல்லிச் சம்பாதித்த ஏராள சொத்துகளை அமெரிக்காவில் முதலீடு செய்து[மனை&வீடு விற்பனை-ரியல் எஸ்டேட்] அங்கேயே குடியேறிவிட ஜக்கி முடிவு செய்துள்ளார் என்பது நக்கீரனின் அனுமானம்.

அவரின் அனுமானம் உண்மை நிகழ்வு ஆவதற்கு வாய்ப்பே இல்லை என்பது நம் எண்ணம்.

உச்ச அதிகாரம் பெற்றவர்களின் ஆதரவு இருக்கும்வரை ஜக்கியின் ஒரு சுட்டுவிரலைக்கூட எவரும் அசைக்க முடியாது; ..... .....கூட யாரும் பிடுங்க முடியாது.

நக்கீரனின் காணொலி கீழே: