சனி, 8 ஏப்ரல், 2023

‘மொழு மொழு’ மண்டையருக்கு ஓர் எச்சரிக்கை!!!


நீங்கள் வழுக்கைத் தலையரா?

வழுக்கை விழுந்தது எப்போது?

30 வயதுக்குப் பிறகு என்றால் நீங்கள் கொடுத்துவைத்தவர். இதை நினைந்து நினைந்து பெருமிதத்தில் மிதக்கலாம். காரணம்.....

‘வழு வழு’ மண்டையர்களுக்கு உடலுறவில் அதிக நாட்டம் இருக்கும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை என்பார்கள்; ‘அது’ விசயத்தில் நீங்கள் சாதனை நிகழ்த்துபவரும்கூட. வயசுப் பெண்களை உங்கள் மொழு மொழு மண்டை வெகுவாகக் கவரும் என்பதையும் கருத்தில் கொள்வீராக.

ஆனால், இது குறித்த அதிர்ச்சிச் செய்தி என்னவென்றால், உங்களுக்கு வழுக்கை விழுந்தது 30 வயதுக்குள் என்றால், அது மிகுதியும் கவலைக்குள்ளாக்கும் ஆபத்தான நிலை என்கிறார்கள்.

இளவயதில் தலையில் வழுக்கை விழுந்தால் அது காலப் போக்கில் ‘புற்று நோய்’ ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளதாம்.

20 - 30 வயதுக்குள் இது நடந்தால், வயது கூடுகிறபோது ‘புராஸ்டேட்’(கலவியின்போது, வழுவழுப்பான திரவத்தைச் சுரக்கும் ஆண்களுக்கான சுரப்பி இது) புற்று நோயை ஏற்படுத்தும் வாய்ப்பை இது இரட்டிப்பாக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எனவே, இந்தப் பாதிப்புக்கு உள்ளான வாலிப வயது இளவட்டங்கள், வழுக்கை விழுவதைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து, மருத்துவர்களை அணுகி, அவர்களின் ஆலோசனையின்படி வழுக்கை அதிகரிப்பதைத் தடுப்பதற்கான மருந்துகளை உட்கொள்வது மிக மிக அவசியமாகும்.

வழுக்கை மற்றும் புற்று நோய் ஆகிய இரண்டிலும் ஆண்களைப் பொருத்தமட்டில் ஹார்மோன்கள் பிரதான இடம் வகிக்கின்றன.


பிரான்ஸில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவிலேயே இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது செய்தி.

===============================================================================