ஆகஸ்ட் 21 அன்று, சர்வதேசப் பாலுறவுத் தினத்தை[International Sex Day]மக்கள் கொண்டாடுகிறார்கள்[https://www.urbandictionary.com/define.phpterm=International%20Sex%20Day] பாலுறவு கொள்ளும் முறைகளை நன்மை பயக்கும் விதத்தில் கையாளவும், அது எத்தனை உன்னதமானது என்பதை மக்கள் உணர்ந்து போற்றவும் இத்தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
சர்வதேசப் பாலியல் தொழிலாளர்கள் தினம்[International Whores' Day or International Sex Workers' Day] ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 2 அன்று அனுசரிக்கப்படுகிறது. பாலியல் தொழிலாளர்களை மதிப்பதும், அவர்களுக்கான உரிமைகளை அங்கீகரிப்பதும், இந்த நாள் கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கங்களாகும்[Wikipedia].
பாலுறவுத் தினம் கொண்டாடுவதோடு, பாலுறவில் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும்[World Sexual Health Day(WSHD)] ஒரு நாளை[செப்டம்பர் 4] ஒதுக்கியிருக்கிறார்கள்.
இவை தவிர, செப்டம்பர் 2இல் அனுசரிக்கப்படுகிறது ஆசனவாய்ப் பாலுறவு[International Anal Sex Day]த் தினம்[இதை ‘அடச்சீய்... அசிங்க தினம்’ என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்].
பாலுறவின் முக்கியத்துவத்தை மக்களின் மனங்களில் பதியச் செய்திட இப்படிப் பல தினங்களை அறிவித்த உலகச் சுகாதார அமைப்பு[WHO], பாலுறவால் விளையும் பல தீமைகளைக் கவனத்தில் கொண்டு, “வேண்டாம் பாலுறவு” தினம்[International “No Sex” Day] என்ற ஒன்றையும் உலகத்தவருக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம்.
ஒரே ஒரு நாள் பாலுறவுச் சிந்தனைகளுக்கு இடம் தராமல் இருந்தால், அந்த ஒரு நாளில் மட்டுமாவது பாலுறவுக்காக நிகழ்த்தப்படும் கொடூரங்களும் வன்முறைகளும் குறையக்கூடும் என்பது கருத்தில் கொள்ளத்தக்கது.
வாய்ப்புள்ளவர்கள் இதை உ.சு.அமைப்பின் கவனத்திற்குக் கொண்டுசென்றால் அது பெரும் வரவேற்புக்கு உரியதாக அமையும்!