எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வியாழன், 15 ஜூன், 2023

மாம்பழம் உண்ணும் நடிகையும் மதி கெட்ட ஊடகமும்!

கீர்த்தி சுரேஷ் ஒரு நடிகை என்பது சிறுசுகள் முதல் பெருசுகள்வரை எல்லோருக்கும் தெரியும்.

//அவர் இன்று மாம்பழம் சாப்பிட்டாராம்.

“சீசன் முடிவதற்குள் பண்டூரி மாம்பழங்களைச் சாப்பிடுங்கள்” என்று சொன்னதோடு ஒரு குட்டிக் காணொலியும்[வீடியோ] வெளியிட்டார். அதற்கு ஒன்பது லட்சம் லைக்குகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள் ரசிகர்கள்”// என்பது ‘தினமலர்’ச் செய்தி.

நான் மட்டுமே கூமுட்டைன்னு நினைச்சிட்டிருந்தேன்.

இதிலிருந்து என்னைவிடவும் மோசமான படு கூமுட்டைகள் லட்சக் கணக்கில் இருக்காங்கன்னு தெரியுது.

இதையும் ஒரு செய்தியாக வெளியிட்ட ‘தினமலர்’க்காரனும் ஒரு கூமுட்டைதான்.

அந்த அம்மா சூப்பிட்டுத் தூக்கி எறிந்த கொட்டையை நாளை ஏலத்தில் விடப்போகுதாம்.

அதை ஏலத்தில் எடுக்க பல லட்சம் ரசிகக் கூமுட்டைகள் வரிசை[கியூ]கட்டி நிற்குறாங்களாம்.

அம்மணி சப்பிப்போட்ட கொட்டை எத்தனைக் கோடிக்கு ஏலம் போனதுங்கிற விவரம் நாளை தினமலரில் வெளியாகும்.

தவறாம படிங்க[முடி திருத்தும் கடைக்குப் போனா ஓசியில் படிச்சுடலாம். தினமலரைக் காசு கொடுத்து வாங்க வேண்டாம்].

https://m.dinamalar.com/cinema_detail.php?id=114040


                                             *   *   *   *   *

நன்றி: கூமுட்டை https://kuuumutttai.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக