பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 15 ஜூன், 2023

‘முத்தப் பரிசு’..... கிளு கிளு காதல் கதை!


ர் இனிய மாலைப் பொழுதில், அன்பரசு அமுதாவுக்கு ஒரு பேனா கொடுத்தான். “இது நான் உனக்குத் தரும் பிறந்தநாள் பரிசு. பதிலுக்கு ஒன்னு கொடு” என்று இதழ் குவித்துக் கன்னம் காட்டினான்.

“அன்பளிப்புன்னு கொடுத்துட்டு பதிலுக்கு ஒன்னு கேட்குறே. நீயென்ன காதலனா, வியாபாரியா?” என்றாள் அமுதா.

“காதல் வியாபாரி” என்று கண்ணடித்தான் அவன்.

“போடா, வெளியே போடா” -போலியாய் விரட்டினாள் அவள்.

“கல்யாணத்துக்கு அப்புறம் கொடுக்கப்போறதை....”

குறுக்கிட்டாள் அவள். “அப்போ பார்த்துக்கலாம்.” 

“நான் என்ன எல்லார்த்தையும் இப்பவே பார்க்கணும்னா சொன்னேன்?” குறுகுறுத்த பார்வையுடன், ஒவ்வொரு வார்த்தையாய் நிறுத்தி நிறுத்தி அவன் சொல்ல அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

கட்டிலில் கிடந்த தலையணையை அவன் மேல் வீசினாள். ‘முத்தமிடு' என்று அதில் எம்ராய்டரி செய்யப்பட்டிருந்தது.

“இதோ தர்றேன்” என்று அவளை நெருங்கினான் அவன்.

அவன் பிடியில் சிக்காமல் கட்டிலைச் சுற்றிச் சுற்றி ஓடினாள் அவள்.

துரத்தினான் அவன். மூச்சு வாங்கியது.

“கண்ணா. தம்மெல்லாம் அடிக்காதேன்னு சொன்னேனே, கேட்டியாடா? ஓட முடியல பாரு. உன்னால ஒரு பொம்பளையைப் பிடிக்க முடியல. என்னடா ஆம்பிளை நீ?” -வளைந்து நெளிந்து குலுங்கிக் குலுங்கி ஒய்யார நடனம் ஆடினாள் அவள்.

அவனின் ஆண்மை விழித்துக்கொண்டது. 

“விடமாட்டேன்டி” -தம் பிடித்து அவளை நோக்கி முன்னேறினான்.

அவனுக்கு பழிப்புக் காட்டிவிட்டுப்  சுழன்று ஓடினாள் அவள்.

திடீரெனப் பாய்ந்து சுவரோடு சேர்த்து அவளை அமுக்கிவிடத் திட்டமிட்டான் அவன்.

”நீ ஜெயிச்சுட்டே. நில்லுடி” என்றான்.

அவளும் அவனுக்கு மார்பு காட்டி, சுவரோடு முதுகு சேர்த்து நின்றாள்.

ஒரே பாய்ச்சலில் சுவரோடு சேர்த்து அவளை அமுக்கினான் அவன். 

தன் நிராதரவான நிலையைப் புரிந்துகொண்ட அவள், “கன்னத்தில் மட்டும் ஒன்னு கொடு போதும்” என்றாள்.

“ஒன்னோடு நிறுத்த முடியாது. முதலிரவு அன்னிக்கி மொத்தமா தந்துடுறேன்” என்று பின்வாங்கி நகர்ந்தான் அன்பரசு.

அவனை ஏக்கத்துடன் பார்த்தாள் அமுதா.

                             *   *   *   *   *
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ‘குமுதம்’ இதழில் வெளியான கதை, ஆங்காங்கே சில மாற்றங்களுடன்.