கதை | குமுதம் | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதை | குமுதம் | லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 டிசம்பர், 2025

அன்றாடங்காய்ச்சிகளின் கடவுள்!!![பதிவு பழசோ பழசு!]

“மேஸ்திரி, நாளைக்கு என் குடும்பத்தோட எங்க குல தெய்வம் கோயிலுக்குப் போறேன். வேலைக்கு வர முடியாது" என்றான் சித்தாள் பழனி.

“நாளைக்கு நிறைய ஆள் வேணும். ஞாயிற்றுக் கிழமை போப்பா” என்றார் மேஸ்திரி.

“இல்ல மேஸ்திரி. ஆறு மாசம் முந்தியே சாமியை நேர்ந்துட்டேன். அதுக்கான நேர்த்திக் கடனை உடனே நிறைவேத்தியாகணும். நாளைக்கு நல்ல நாள்.”

“அப்படியென்ன பெரிய நேர்த்திக் கடன்? உண்டியலில் கத்தை கத்தையா பணம் போடப் போறியா? இல்ல, ஆயிரம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுறயா?” -மேஸ்திரியின் குரலில் ஏகத்துக்குக் கிண்டல்.

“அதுக்கெல்லாம் எங்கமாதிரி அன்னாடுங்காய்ச்சிகளுக்கு ஏதுங்க வசதி?”

“அப்படீன்னா, உன் குடும்பத்தில் உள்ள அத்தனைப் பேரும் மொட்டை போடுங்களேன். இதுக்குச் செலவு கம்மிதான்”- மீண்டும் கிண்டல்.

“எங்க குல தெய்வம் சாமியும் எங்கள மாதிரியே பரம ஏழை மேஸ்திரி. வசதியுள்ள யாரும் இதைச் சீந்துறதில்ல. கோயிலுக்கு வருமானமும் இல்ல. கோயிலைச் சுத்தி எருக்கஞ் செடியும் முள்ளுச் செடியும் முளைச்சிப் புதர் மண்டிக் கிடக்குது. அதையெல்லாம் புடுங்கிப் போட்டுச் சுத்தம் பண்ணனும்” என்றான் பழனி.

                                        *   *   *   *   *

இது என் படைப்பாக, 28-05-2008 ‘குமுதம்’ வார இதழில் வெளியானது.

வியாழன், 15 ஜூன், 2023

‘முத்தப் பரிசு’..... கிளு கிளு காதல் கதை!

ஓர் இனிய மாலைப் பொழுதில், அன்பரசு அமுதாவுக்கு ஒரு பேனா கொடுத்தான். “இது நான் உனக்குத் தரும் பிறந்தநாள் பரிசு. பதிலுக்கு ஒன்னு கொடு” என்று இதழ் குவித்துக் கன்னம் காட்டினான்.

“அன்பளிப்புன்னு கொடுத்துட்டு பதிலுக்கு ஒன்னு கேட்குறே. நீயென்ன காதலனா, வியாபாரியா?” என்றாள் அமுதா.

“காதல் வியாபாரி” என்று கண்ணடித்தான் அவன்.

“போடா, வெளியே போடா” -போலியாய் விரட்டினாள் அவள்.

“கல்யாணத்துக்கு அப்புறம் கொடுக்கப்போறதை....”

குறுக்கிட்டாள் அவள். “அப்போ பார்த்துக்கலாம்.” 

“நான் என்ன எல்லார்த்தையும் இப்பவே பார்க்கணும்னா சொன்னேன்?” குறுகுறுத்த பார்வையுடன், ஒவ்வொரு வார்த்தையாய் நிறுத்தி நிறுத்தி அவன் சொல்ல அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

கட்டிலில் கிடந்த தலையணையை அவன் மேல் வீசினாள். ‘முத்தமிடு' என்று அதில் எம்ராய்டரி செய்யப்பட்டிருந்தது.

“இதோ தர்றேன்” என்று அவளை நெருங்கினான் அவன்.

அவன் பிடியில் சிக்காமல் கட்டிலைச் சுற்றிச் சுற்றி ஓடினாள் அவள்.

துரத்தினான் அவன். மூச்சு வாங்கியது.

“கண்ணா. தம்மெல்லாம் அடிக்காதேன்னு சொன்னேனே, கேட்டியாடா? ஓட முடியல பாரு. உன்னால ஒரு பொம்பளையைப் பிடிக்க முடியல. என்னடா ஆம்பிளை நீ?” -வளைந்து நெளிந்து குலுங்கிக் குலுங்கி ஒய்யார நடனம் ஆடினாள் அவள்.

அவனின் ஆண்மை விழித்துக்கொண்டது. 

“விடமாட்டேன்டி” -தம் பிடித்து அவளை நோக்கி முன்னேறினான்.

அவனுக்கு பழிப்புக் காட்டிவிட்டுப்  சுழன்று ஓடினாள் அவள்.

திடீரெனப் பாய்ந்து சுவரோடு சேர்த்து அவளை அமுக்கிவிடத் திட்டமிட்டான் அவன்.

”நீ ஜெயிச்சுட்டே. நில்லுடி” என்றான்.

அவளும் அவனுக்கு மார்பு காட்டி, சுவரோடு முதுகு சேர்த்து நின்றாள்.

ஒரே பாய்ச்சலில் சுவரோடு சேர்த்து அவளை அமுக்கினான் அவன். 

தன் நிராதரவான நிலையைப் புரிந்துகொண்ட அவள், “கன்னத்தில் மட்டும் ஒன்னு கொடு போதும்” என்றாள்.

“ஒன்னோடு நிறுத்த முடியாது. முதலிரவு அன்னிக்கி மொத்தமா தந்துடுறேன்” என்று பின்வாங்கி நகர்ந்தான் அன்பரசு.

அவனை ஏக்கத்துடன் பார்த்தாள் அமுதா.

                             *   *   *   *   *
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ‘குமுதம்’ இதழில் வெளியான கதை, ஆங்காங்கே சில மாற்றங்களுடன்.