பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 16 ஜூன், 2023

‘அது’ விசயத்தில் ஐன்ஸ்டீன் தோற்றது ஏன்?!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது 16 வயதில் தனது ஜெர்மன் குடியுரிமையைத் துறந்தார், ஏனெனில் அவர் தன்னை உலகின் குடிமகனாகக் கருதினார். அவர் சுவிஸ் குடியுரிமை பெறும் வரை 1901 வரை நாடற்றவராகவே இருந்தார்[Albert Einstein renounced his German citizenship when he was just 16 because he considered himself a citizen of the world. He would remain stateless until 1901, when he became a Swiss citizen]. -Sources: (National Geographic) (History) (UNESCO) (Mental Floss) (Open Culture). https://www.msn.com/en-in/news/other/the-dark-side-of-albert-einstein/ss-AAV1kyn?li=AAgfYGb

ஐன்ஸ்டீன் பிறந்த தேதி: 14 மார்ச், 1879; இறந்த நாள்: 18 ஏப்ரல், 1955.

1895இல் ஐன்ஸ்டீனுக்கு 16 வயது. இந்த வயதிலேயே ஜெர்மன் குடியுரிமையைத் துறந்தார்; சுவிஸ் குடியுரிமை பெற்றது 1901.


6 ஆண்டுக்காலம் உலகக் குடிமகனாகவே இருந்திருக்கிறார்.

தொடர்ந்து அவரால் அவ்வாறே வாழ்ந்திட முடியாமல்போனது ஏன்?

நாடற்றவராக உலகில் வாழ முடியாதது மிக முக்கியக் காரணம்.

உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஓரினத்தவரே. ‘என் நாடு. உன் நாடு’ என்று வேறுபாடு பாராட்டாமல் இந்த உலகமே ஒட்டுமொத்த மனிதருக்கானது[ஒரே நாடு] என்று எண்ணும் அவருக்கிருந்த மனப்பக்குவம் பிற மனிதர்களுக்கு இல்லாததும் காரணம்.

மனப்பக்குவம் இருந்திருப்பினும், அதைப் பிறர் அறிய வெளிப்படுத்துவதற்கான துணிவும் உலகோருக்கு இல்லாதிருந்திருக்கலாம்.

பலநாடுகள், பல மதங்கள், பல இனங்கள், பல மொழிகள்[உலகோர் அனைவருக்குமான ஒரே மொழியை உருவாக்குவது இந்த அறிவியல் உலகத்தில் சாத்தியம்தான்] என்னும் வேறுபாடுகளைக் களைந்து/கடந்து வாழும் அளவுக்கு அனைவருடைய மனமும் பக்குவப்பட்டால் ஐன்ஸ்டீனின் கனவு எதிர் காலத்தில் நனவாகலாம்.

என்றாவது ஒரு நாள் இந்த உலகம் அழியக்கூடும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

அழிவு நிகழ்வதற்குள் இந்த அதிசயம் நடக்குமா?

யாரறிவார்?!

***[‘அது’ என்பதற்குப் ‘பலானது’ என்று அர்த்தம் பண்ணியிருந்தால் மன்னியுங்கள்! ஹி...ஹி...ஹி!!!]

* * * * *

‘டேவிஸ்’..... இவர் இன்னொரு உலகக் குடிமகன்!

அமெரிக்காவில் பார் ஹார்பரில் 1921 ஜூலை 27 அன்று டேவிஸ் பிறந்தார். மேயர் - ஹில்டா டேவிஸ் தம்பதியினரின் மகன். 1940ல் எபிஸ்கோப்பல் அக்காதமியில் பட்டப்படிப்பை முடித்தார். கார்னகி கல்விக்கழகத்தில் தொழில்நுட்ப கல்வியை முடித்தார்.

டேவிஸ் நியூயார்க் பிராட்வே அரங்குகளின் நடிகராக இருந்தார். இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க வான்படையில் விமானியாகப் பணியாற்றினார். ஜெர்மனி மீது குண்டுவீசிய பி-17 ரக குண்டுவீசி வானூர்தியில் பணிபுரிந்தார். தான் குண்டு வீசிய படங்களைப் பார்த்தபோது பின்னர் ஆழமான மன நெருக்கடிக்குள்ளானார். தேசியவாதம் என்பதன் தீமைகளை உணர்ந்தார். இனிமேல் எந்த நாட்டுக்கும் குடிமகனாக இருக்கப்போவதில்லை’ என்ற முடிவை எடுத்தார்.