மறுபிறவி உண்டு என்கிறார்கள். அவர்களைத்தான் மகான்கள் என்றும் அவதாரங்கள் என்றும் புகழ்ந்து போற்றுகிறார்கள் நம் மக்கள்.
இந்தப் பிறவியில் நல்லவை செய்து நல்லவராக வாழ்ந்தால் அடுத்த பிறவியில் சுகபோக வாழ்க்கை வாழலாம் என்றார்கள்; என்கிறார்கள்.
இப்போது இந்த மண்ணில் பிறந்து வாழ்ந்துகொண்டிருப்பவர்களில் துன்பமே இல்லாத, அல்லது, மிக மிக மிகக் குறைவான துன்பங்களுடன் சுகபோக வாழ்க்கை வாழ்பவர் எவருமில்லை.
இவர்கள் அத்தனை பேருமே இதற்கு[இப்பிறவி] முன்பே சில முறையோ பல முறையோ பிறந்து வாழ்ந்து[முற்பிறவிகளில்] மடிந்தவர்கள்தான்.
அப்பிறவிகளில்[வாழ்ந்து முடித்த பிறவிகள்], அவர்களில் சிலரேனும் நல்லனவே செய்து முழுக்க முழுக்க நல்லவராகவே வாழ்ந்திருந்தால், அந்தச் சிலராவது இப்போது[இப்பிறவி] துன்பமே இல்லாத இன்ப வாழ்க்கை வாழ்பவர்களாக இருத்தல் வேண்டும்.
அப்படி எவரும் இல்லை என்பதால்.....
வாழ்ந்து முடித்த பிறவிகளில் நல்லவராக மட்டுமே வாழ்ந்தவர்கள் எவரும் இல்லை என்றாகிறது[இயற்கை நெறிக்கிணங்க அது சாத்தியமும் இல்ல].
அது சாத்தியம் இல்லாமல்போனது ஏன்?
அது இயற்கை.
அடுத்துவரும் பிறவிகளில் மட்டும் அது எப்படிச் சாத்தியமாகும்?
ஆகாது.
அப்புறம் எதற்குக் கடவுள் நம்பிக்கை, விழாக்கள், கொண்டாட்டங்கள், கூத்தடிப்புகள் எல்லாம்?
“இருக்கும்வரை, இயன்றவரை பிறருக்குக் கெடுதல் விளைவிக்காமல், நல்லன செய்து வாழ முயல்வதே போற்றுதலுக்கு உரியதாகும்” என்று சொல்லாமல், “பாவம், புண்ணியம், புண்ணாக்கு” என்று கதையளந்துகொண்டிருப்பவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள்; நம்மைப் போன்றவர்களால் புறக்கணிக்கத்தக்கவர்கள்!