வியாழன், 8 ஜூன், 2023

அசிங்க அனுபவங்கள்! ஆறாத [மனக்]காயங்கள்!! பாவம் பாலியல் தொழில் பெண்கள்!!!

ல ஆண்டுகள் பாலியல் தொழில் செய்து சலித்த பெண்ணொருத்தி, ஊடகம் ஒன்றுக்கு[B.B.C.] அளித்த பேட்டியின் சாராம்சம்.....

மனைவியின் மூலம் பாலுறவில் முழுத் திருப்தி பெறாத கணவன்மார்களும், திருமணம் ஆகாதவர்களும், மனைவியை இழந்தவர்களும் அதிக அளவில் தேடி வருவார்கள்.

விதம் விதமாக உடலுறவு இன்பம் அனுபவிக்க வருபவர்களும் உண்டு.

பாலியல் பற்றிய சந்தேகங்களுடன் பதின்பருவப் பையன்கள் என்னைத் தேடி வருவது என்னை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது; வேதனைப்பட்டதும் உண்டு.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் உடலுறவு பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்னும் ஆசையில் சிலர் வருவார்கள். அவர்களுக்கு உதவுவதில் ஒருவிதத் திருப்தி கிடைக்கும்.

திருமணம் செய்யாத வயதான ஆண்களும் என் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்.

தீராத வியாதி உள்ள ஆண்கள்கூட வருவார்கள்.

ஒரு பாலியல் தொழில்காரி என்ற வகையில் இவர்களைத் திருப்திப்படுத்தி அனுப்புவது வழக்கமாகிப்போனது.

ஆனால், பாலியல் வக்கிரம் கொண்ட ஆண்கள் வரும்போது நான் பட்ட வலிகள் நிறையவே” என்றெல்லாம் சொல்லி மிகு வருத்தத்தில் மூழ்குகிறார் பா.தொ.பெண்.

அதென்ன, பாலியல் வக்கிரம்?


சொல்கிறார்:

ஆபாசமாகப் பேசுவார்கள்; என்னையும் பேசச் சொல்வார்கள்.


காசு கொடுத்திருக்கிறேன். நான் சொல்வதைச் செய் என்பார்கள்.


உடலுறவு கொள்ளும் நேரத்தில் ஆபாசமாகக் கத்தச் சொல்வார்கள்,


காசு அதிகமாகத் தருகிறேன், மீண்டும் எனக்கு உணர்ச்சி வரவழைக்க ஏதாவது செய்யவேண்டும் என்பார்கள்.


பாலியல் பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்கள் ஒருமாதிரி என்றால், அதிகமாகத் தெரிந்துகொண்டவர்கள் ஆபத்தானவர்கள். அவர்கள், வாய்வழி உறவுக்கு வற்புறுத்துவார்கள். என் உடல்நலனுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று சொன்னால்கூட விடமாட்டார்கள். அதனால், ஒரு சில நாட்கள் தீவிரமாக உடல் வலிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாவதுண்டு..


ஒரு சிலர் காண்டம் அணிந்துகொள்ள மறுப்பார்கள்.


சிலர் என் உறுப்புகளைக் காயப்படுத்திச் சந்தோஷம் காண்பார்கள்.


காயங்களுடன், அடுத்த கஸ்டமரிடம் செல்வதற்குக் கூச்சமாக இருக்கும். அதை அறிந்தவுடன் அந்த நபரும் மோசமாகத் திட்டி, உறவு வைத்துக்கொள்ளும் சம்பவங்களும் நடந்துள்ளன.....


* * * * *


‘பி.பி.சி.’ மேற்கொண்ட பேட்டியின் ஒரு பகுதிக்கான உள்ளடக்கம்[மட்டும்], மொழிநடையில் கொஞ்சம் மாற்றங்களுடன்[கருத்துப் பிறழ்வு இல்லாமல்] பதிவு செய்யப்பட்டுள்ளது.