பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 9 ஜூன், 2023

“கோயில் வாயிலில் குமரிக்கு முத்தம்! இது குற்றமா ஏழுமலையானே?!"

வட இந்தியாவை[?]ச் சேர்ந்த திரைத்துறைக் குழு ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்தது.

வழிபாட்டை முடித்துக்கொண்டு கோயிலிலிருந்து வெளியேறிய நிலையில், கோயிலின் வாயிலிலேயே திரைப்பட இயக்குநர்[ஓம்ராவத்] கதாநாயகியைக்[கீர்த்தி சரோன்] கட்டியணைத்து[இறுக்கமாக?] முத்தமாரி பொழிந்திருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து, இசையமைப்பாளரும் அம்மணியைக் கட்டித் தழுவி வழியனுப்பி வைத்தாராம்{இது இன்றைய ‘தினகரன்’[09.06.2023]நாளிதழ்ச் செய்தி.

எஞ்சிய செய்தியை அறிவதற்கு முன்பு ஒரு கேள்வி.

இந்தப் பரபரப்பூட்டிய நிகழ்ச்சியின் பின்விளைவு என்னவாக இருக்கும்?

நடிகை வெகு அழகானவர்[இளவட்டங்களின் கண்களுக்குக் கவர்ச்சியாகவும் தெரிவார்] இயக்குநர் பட்டும் படாமலும் அல்ல; இறுக்கமாக அணைத்து முத்த மழை பொழிகிறான்; போதாக்குறைக்கு இசையமைப்பாளனின் கூடுதல் அணைப்பு வேறு.

இதைப் பார்த்துவிட்டு இளவட்டங்கள் உணர்ச்சிவசப்பட்டு ஆளாளுக்கு அந்த நடிகையை அணைத்து முத்தம் கொடுக்க முயன்றிருந்தால்[போலீஸ் பாதுகாப்பு இருந்ததாகத் தெரியவில்லை].....

நடிகையின் நிலை?

வில்லங்கம் ஏதுமில்லாமல்,  உடுத்த ஆடையுடன் அவர் ஊர் திரும்பியிருக்கமாட்டார் என்பது சர்வ நிச்சயம்.

இது நம்மைப் போன்றவர்களின் மனங்களில் முகிழ்க்கும் கவலை.

ஆனால், ஆந்திர மாநில ‘பாஜக’ செய்தித் தொடர்பாளரின் நிலையோ முற்றிலும் மாறுபட்டது. அவர் விடுத்துள்ள அறிக்கையில்.....

“இதனால் கோயிலின் புனிதம் கெட்டுவிட்டது. திரைப்படக் குழுவினர் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார் அவர். 

முத்தக் காட்சியைக் கண்டுகொண்டிருந்த இளைஞர்களைப் பற்றி அவர் கவலைப்படவில்லை; எதிர்ப்புத் தெரிவிக்காத அப்பாவி[?!] நடிகையைப் பற்றிக் கவலையில்லை அவருக்கு. கோயிலின் புனிதம் பற்றி மட்டுமே கவலைப்பட்டிருக்கிறார்.

புனிதம் என்றால் என்ன?

புனிதம் என்று தனியாக ஏதுமில்லை. எவரும் எவ்வுயிர்க்கும் மனத்தளவில் தீங்கு நினையாமையும் செய்யாமையுமான  உன்னத நிலையே புனிதம் எனப்படும்.

ஆகவே, இங்கு அறியத்தக்கது பொதுமக்கள் வாழுகிற, நடமாடுகிற அத்தனை இடங்களுமே புனிதமானவை என்பதுதான். அங்கெல்லாம் ஆபாசக் காட்சிகளும் நிகழ்ச்சிகளும் இடம்பெறாமல் பாதுக்காக்கப்படுதல் வேண்டும்.

எனவே பாஜக பிரமுகர்களே, மக்கள் வாழ்வில் புனிதத்தை நிலைநிறுத்துவதற்காக மட்டுமே நீங்கள் கவலைப்படுங்கள். 

கோயில் வாசல்களும் பொதுமக்கள் நடமாடும் இடம் என்பதால் அது குறித்து நீங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளுதல் அவசியமற்றதாகும்.