புதன், 13 செப்டம்பர், 2023

இது கலிகாலமா, காமக் ‘களி’காலமா?![களித்தல்>இன்புறுதல்]

லண்டனில் உள்ள லூடனில் இருந்து ‘இபிசா’ நோக்கிச் சென்றுகொண்டிருந்தது ‘ஈஸிஜெட்’ விமானம்.

அதன் ஊழியர் ஒருவருக்கு அவசரமா ஒன்னுக்கோ ரெண்டுக்கோ வந்திருக்க வேண்டும். ஓடிப் போய் கழிவறை[பாத்ரூம்]க் கதவைத்  திறந்தார். உள்ளே அவர் கண்ட கன்றாவிக் காட்சி அவரைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அதைக் காட்சி என்பதைவிட நிகழ்வு என்று சொல்லலாம்.

பயணிகள் நிறைந்திருந்த அந்த விமானத்தில் இடம்பெறக் கூடாத அசிங்க நிகழ்வு அது.


கதவு திறக்கப்பட்டபோது, கழிவறை நிகழ்வைக் கவனித்துவிட்ட பயணிகள், “ஹோ…” என்று ஆரவாரம் செய்து வாய்விட்டுச் சிரித்துக் கை தட்டினார்களாம்.


அவர்கள் கண்டது?


அது கழிவறை என்பதையும் மறந்து, விமானத்தில் பயணித்த ஒரு காதல் ஜோடி[காம ஜோடி] ஈருடல் ஓருடலாய்ப் புணர்ச்சியில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதுதான்.


இச்செய்தியை வாசித்தவுடன், மண்ணுலகில் கலவி செய்து செய்து சலித்துப்போய், ஒரு மாறுதலுக்காக அவர்கள் இதை விண்ணுலகப் பயணத்தில் செய்திருப்பார்களோ என்று தோன்றியது.


விமானப் பயணத்தின்போது, புவியீர்ப்பு குறைவதால், விந்து முந்தாமல், நீண்ட நேர இன்ப சுகத்துக்கு ஆசைப்பட்டிருப்பார்களோ என்றும் நினைக்கத் தோன்றியது.


மேலும் கொஞ்சம் யோசித்ததில், ‘பறக்கும் விமானத்தில் பாலுறவு’ கொண்டதன் மூலம், ‘கின்னஸ்’ சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிட ஆசைப்பட்டிருப்பார்களோ என்னும் சந்தேகம்கூட எழுந்தது.


ஆனால்,


கழிவறையில் அந்தரங்கச் சுகம் அனுபவிக்க நினைத்த அந்தத் தம்பதியர், கழிவறையின் கதவை மூடத் தவறியது, மேற்கண்ட சந்தேகங்கள் தவறானவை என்பதைப் புரியச் செய்ததோடு, அவர்கள் கடும் காமத்தின் பிடியில் சிக்குண்டிருந்ததே காரணம் என்பதையும் அறியச் செய்தது.


ஆக, ‘அது’ விசயத்தில் அந்த இணை, படு பலவீனமானவர்கள் என்பதை அறியமுடிகிறது.


அவர்கள் மனக் கட்டுப்பாடு உள்ளவர்களாக இருந்திருந்தாலும்கூட, அந்தக் கட்டுப்பாட்டை உடைத்துச் சிதறடித்திருக்கிறது காமம்.


ஆம், காமம் வேறு எதனையும்விட வலிமை வாய்ந்ததுதான்.


ஆனானப்பட்ட நம் கடவுள்களில் சிலர் நேரம் காலம் கருதாது, கண்ட கண்ட இடத்தில் கலவி இன்பத்தில் திளைத்துக் கிடந்ததும், அதைக் கண்டு கடும் சினத்துக்கு உள்ளான முனிவர்களால் அவர்கள் சபிக்கப்பட்டதுமான புராணங்கள் சொல்லும் கதைகள் நம் நினைவுக்கு வருகின்றன.


விமானப் பயணத்தில் என்ன, ஏவுகணைப் பயணத்திலும்கூட ஆண்-பெண் புணர்ச்சி நிகழும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று சொல்லலாம்.


காமம் காமம் என்று மனிதர்கள் அலைவதைப் பார்த்தால், இதைக் ‘கலியும்’ என்பதோடு, காமக் ‘களியுகம்’ என்றும் சொல்லலாம்.


***பதிவில் இடம்பெறாத ஊடகச் செய்திகளை வாசித்து அகமகிழக் கீழ்க்காணும் முகவரியைச் சொடுக்குக.


https://tamil.oneindia.com/news/london/what-happened-in-the-london-flight-bathroom-and-why-did-police-inquiry-about-it-538227.html[13.09.2023]