திங்கள், 1 ஜூலை, 2024

அடேய், India[இந்தியா]வை भारतीय देश[இந்தி நாடு]ன்னு சீக்கிரம் மாத்துங்கடா!!!

இந்தியக் குற்றவியல் சட்டம்(ஐபிசி), இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம்(சிஆர்பிசி) மற்றும் இந்தியச் சாட்சிகள் சட்டம்(ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவை இன்று(ஜூலை 1) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன[https://www.hindutamil.in].

‘இந்தி’யர்களே,

இந்த மூன்று சட்டங்களை மட்டுமல்ல, இனி நீங்கள் அடுத்தடுத்துக் கொண்டுவரவிருக்கும் அத்தனைச் சட்டங்களுக்கும் இந்தியிலேயே[சமஸ்கிருதம் கொஞ்சம் கலக்கலாம்] பெயர் சூட்டுங்கள்.

நாடெங்கும் உள்ள நடவணரசின் அலுவலகங்களுக்கும், தபால் நிலையங்களுக்கும், வங்கிகளுக்கும், ரயில் நிலையங்களுக்கும், இதர பிற நிறுவனங்களுக்கும் சூட்டப்பட்டுள்ள பெயர்களை[ஆங்கில&மாநில மொழிகள்] இந்திப் பெயர்களாக மாற்றுங்கள். அடையாளத்துக்குக்கூட, ஆங்கிலத்திலான பெயர்களோ ஆங்கில எழுத்துகளோ இடம்பெற்றிருத்தல் கூடாது.

India[இந்தியா] என்னும் இந்த நாட்டின் பெயரையும் भारतीय देश[இந்தி நாடு] என்று மாற்றுங்கள்.

மோடி, அமித்ஷா[குஜராத்தி மொழிப் பெயர்கள்?] போன்ற இந்தி நாட்டின் தலைவர்களின் பெயர்களையும், அவை வேறு வேறு இந்திய மொழிப் பெயர்களாக இருக்குமாதலால், ‘இந்தி’யரால் காலங்காலமாகப் பயன்படுத்தப்படும் இந்திப் பெயர்களாக மாற்றிடுவீர்.

மறந்தும்கூட மக்களில் எவராவது இந்தி தவிர அவரவர் தாய்மொழியில் பேசினால், அவர்களைச் செத்தொழியும்வரை கடுங்காவல் சிறையில் அடைப்பீர். 

எதிர்த்துப் பேசினால், சிரச்சேதம்கூடச் செய்யலாம்.

இவற்றையும் இவை போன்ற அதிரடி மாற்றங்களையும் செய்தால், ’ஒரே நாடு ஒரே மொழி’ என்னும் மோடி, அமித்ஷா போன்ற ‘இந்தி’யத் தலைவர்களின் கனவு வெகு விரைவில் நனவாகும்!

வாழ்க இந்தி! வளர்க இந்தி!! வெல்க இந்தி!!!

https://www.hindutamil.in/news/india/1272854-new-criminal-laws-explained-and-important-changes-to-be-known.html