புதன், 29 ஜனவரி, 2025

கும்பமேளா குளியலில் சொர்க்கம் சேர்ந்தோர் 50 பேர்! சேர்வோருக்காகத் திறந்தே இருக்கிறதாம் சொர்க்கத்தின் கதவு!!

//புனித நாளான தை அமாவாசையில் கும்பமேளா புனித நீராட்டத்தில் 50 புனிதர்கள்[பக்திமான்கள்] சொர்க்கம் சேர்ந்தார்கள்; மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட புண்ணியவான்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில்[அவர்களின் வரவை எதிர்பார்த்து 24 மணி நேரமும் சொர்க்கவாசல் திறந்தே இருக்கிறதாம்] இருக்கிறார்கள்// என்பது, சற்று முன்னரான [காலை 06.45] ‘சன்’ தொ.கா.செய்தி.

உலகெங்கும் பக்தி நெறி பரப்பக் கடவுளால் இம்மண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நம் வழிபாட்டிற்குரிய அருளாளர் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உ.பி.முதல்வர் யோகி ஆதியானந்துக்கு உத்தரவிட்டிருக்கிறார் என்பது கூடுதல் செய்தி.
[அம்மணக்குண்டிக் காட்டுமிராண்டிகள்]

கும்பமேளா கொண்டாட்டத்தின் நோக்கமே புனித நீராடிப் புண்ணியம் சேர்த்துச் சொர்க்கம் சேர வேண்டும் என்பதுதான்.

நோக்கம் இதுவாக இருக்க, 50[+?] பேர் மட்டுமே சொர்க்கபுரி சென்றடைந்த நிலையில் எஞ்சியிருப்போரும் அங்கு செல்லவிருப்பதைத் தடுக்கும் முயற்சிதான் ‘மீட்பு நடவடிக்கை’ என்பதை நம் பிரதமர் அவர்கள் மறந்தது ஏன் என்று தெரியவில்லை.

புனித நீராடினால் புண்ணியத்தை அள்ளிக் குவிக்கலாம்; சொர்க்கத்தில் இடம் பிடித்து என்றென்றும் சுகித்திருக்கலாம் என்றெல்லாம் தொடர் பரப்புரைகள் செய்ததோடு, கோடிக்கணக்கில் செலவு செய்து, பக்தர்கள் கும்பமேளாவுக்குச் செல்வதற்கான அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்ததே நம் மோடி & யோகி ஆதியானந்த் அரசுகள்தான்.

செய்வதெல்லாம்[செய்யக்கூடாதவை எல்லாம்?] செய்து 50 உயிர்கள்[சரியான கணக்கு?] பலியான நிலையில்[தீ விபத்தில் பலர் இறந்தார்கள்].....

மீட்பு நடவடிக்கை எடுக்கிறார்களாம்.

இவர்களின் இறுக்கமான பிடியில் சிக்கித் தவிக்கும் அப்பாவிப் பக்தர்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்போவது யார்? எவரெல்லாம்?

அந்த ராமச்சந்திர மூர்த்தி மட்டுமே அறிவார்?!