எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 28 ஜனவரி, 2025

இஸ்லாம் பெண்ணுக்கு இந்துப் பெண்ணின் இதயம்! இனி எதற்கு மதங்கள்?

ந்தியாவின் முதல் இருதய மாற்று அறுவைச் சிகிச்சை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செய்யப்பட்டது. அப்போது உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கான சட்டம் ஏதும் இந்தியாவில் இல்லை. சிறப்பு அனுமதிகளைப் பெற்று அந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

1994இல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கென்று சட்டம் வந்த பிறகு, முதல் இருதய மாற்று அறுவைச் சிகிச்சையைச் செய்தவர் மறைந்த டாக்டர் கே.எம். செரியன்தான்.

1995ஆம் ஆண்டில் நடந்த இந்த அறுவைச் சிகிச்சையில் ஹேமா என்ற பெண் சாலை விபத்தால் உயிரிழந்தபோது, அவரது இதயம் மைமூன் பீவி என்ற பெண்ணுக்குப் பொருத்தப்பட்டது.


இது குறித்துப் பேசும்போதெல்லாம், "இந்த அறுவைச் சிகிச்சையில் இருதயத்தைப் பெற்றவர் ஓர் இஸ்லாமியப் பெண். அவருக்கு இருதயம் கொடுத்தவர் ஓர் இந்து. இஸ்லாமியப் பெண்ணுக்கு, இந்துவின் இதயத்தை எடுத்துக் கிறிஸ்தவரான நான் பொருத்தியிருக்கிறேன்” என்று சொல்லிச் சிரிப்பாராம் மருத்துவர் செரியன்[இருதயத்தைப் பெற்ற அந்தப் பெண் அதற்குப் பிறகு நீண்ட காலம் உயிரோடு இருந்தார் என்பது அறியத்தக்கது].


‘மனிதர்களுக்குத் தேவை ‘மனிதம்’தான்; மதம் அல்ல’ என்று தம் செயல்பாட்டின் மூலம் உலகுக்கு உணர்த்தினார் மருத்துவர் செரியன் அவர்கள். அதை உணர்ந்து போற்றி மதங்களைப் புறக்கணிக்கும் மனப் பக்குவம் இன்றளவும் மதவாதிகளுக்கு இல்லை என்பது வெட்கக்கேடு!


https://www.bbc.com/tamil/articles/clynq27q6ndo


                                       *   *   *   *   *