எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 29 ஜனவரி, 2025

‘வெடிகுண்டன்’ சீமானின் வெறிப் பேச்சு! ஈரோட்டிலிருந்து வெளியேறும் பெரியார் சீடர்கள்!!

ரோடு கிழக்குச் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் நேற்று சீமான் பின்வருமாறு பேசினார்:

“நீ வைத்திருப்பது வெறும் பெரியார் எனும் வெங்காயம். என் தலைவன் பிரபாகரன் கையில் வைத்திருப்பது வெடிகுண்டு. நீ பெரியாரின் வெங்காயத்தை என் மீது வீசு. நான் பிரபாகரன் தந்த வெடிகுண்டை உன் மீது வீசுகிறேன். என்ன நடக்கிறது என்று பார்.

ஏய்..... வெச்சிருக்கேன்..... இன்னும் வீசவில்லை. வெடிகுண்டுகளை வீசினேன் என்றால் என்ன ஆவாய் என்று யோசித்துப்பார். புதைச்ச இடத்தில் புல்கூட முளைக்காது என்பதைத் தெரிந்துகொள். Be Carefull... சேட்டையை வேறு எங்காவது வைத்துக் கொள்.”[https://tamil.oneindia.com/].

சீமானின் இந்த ஆக்ரோசப் பேச்சால், பெரியார் தொண்டர்கள் தங்களுக்குப் பாதுகாப்புத் தராத ஸ்டாலின் மீது வசைமாரி பொழிந்துகொண்டே , அலை அலையாக ஈரோட்டிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.

இது ஈரோட்டு நண்பர் ஒருவர் அடியேனுக்குச் சற்று முன்னர் அனுப்பிய தகவல்!

* * * * *