TN Assembly : 2025 -ன் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது. தேசிய கீதம் முதலில் பாடவில்லை என்பதைக் கண்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் சட்டசபையைவிட்டு வெளியேறினார்[https://www.vikatan.com]
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியதால்[பிறகு, 'தேசிய கீதம் பாடாததால்...’ என்று அவரின் x.com தளத்தில் திருத்தம் செய்யப்பட்டது] கோபமடைந்த மேதகு த.நா. ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறினாராம்.
இந்தக் கோபம் ‘பாரத்’இன் பிரதமர் மோடிஜியைக் கடுங்கோபத்திற்கு உள்ளாக்கும். இதன் விளைவு, இனி எப்போது வேண்டுமானாலும் த.நா.சட்டமன்றம் கலைக்கப்படலாம்.
மேதகு ஆளுநர் கோபத்துக்குள்ளாக்கப்பட்டார் என்னும் செய்தி மேலிடத்தைச் சென்றடைவதற்குள் அவரின் கோபத்தைத் தணிப்பது த.நா. முதல்வர் ஸ்டாலின் கடமையாகும்.
ஓர் உடனடி அறிவிப்பின் வாயிலாக அதை நிறைவேற்றலாம். அது.....
“இனி தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் ‘இந்தி மாதா’ வாழ்த்துடன்[வாழ்த்துப்பா இல்லையென்றால் இந்தியில் புலமை பெற்ற அறிஞர்களின் உதவியுடன் நாமே எழுதிக்கொள்ளலாம்] தொடங்கும்.”
இந்தப் பரிந்துரையை ஸ்டாலின் ஏற்பார் என்று மனப்பூர்வமாய் நம்புகிறோம்.
வாழ்க இந்தி மாதா! வளம்பெறுக ‘இந்தி’யர் வாழ்வு!!
***இந்திய நாட்டின் அனைத்து மாநிலச் சட்டமன்றங்களிலும் முதலில் ‘இந்தி மாதா’ வாழ்த்து பாடப்படுதல் வேண்டும் என்பது அவர்களின் கனவு?
* * * * *