தமிழ்நாட்டைப் பொருத்தவரை, எந்தவொரு அரசு நிகழ்வாயினும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட பிறகே நிகழ்வு தொடங்கும். நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் பாடுவதுதான் மரபு.
//நடப்பு ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆர்.என்.ரவி, “கூட்டத்தொடரில் தேசிய கீதத்தை முதலிலும், இறுதியிலும் ஒலிபரப்ப வேண்டும்[தமிழ்த்தாய் வாழ்த்து?] என்ற தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்// -இது ஊடகங்களில் வெளியான செய்தி[https://tamil.oneindia.com & https://www.dinasuvadu.com].
தாய்மொழியாம் தமிழைத் தம் உயிரினும் மேலாக மதிப்பவர்கள் தமிழர்கள் என்பதால்தான், அதைத் தாயாக உருவகித்து வாழ்த்திய பிறகே நிகழ்ச்சி தொடங்குவதை வழக்கமாக்கியுள்ளார்கள்.
தாங்களும் இந்தியா என்னும் இந்தத் தேசத்தின் குடிமக்களே என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதம் இசைப்பதையும் வழக்கமாக்கியுள்ளார்கள்.
தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பை ஏற்றதிலிருந்தே, தமிழரின் மொழிப்பற்று இனப்பற்று ஆகியவற்றை இழிவுபடுத்துவதே ‘மேலிடம்’ தனக்கு அறிவுறுத்திய கடமை என்பது போல் செயல்பட்டுவந்த[தமிழ்நாட்டைத் தமிழகம் ஆக்கியது, வள்ளுவருக்குக் காவி ஆடை அணிவித்தது, திராவிடம் காலாவதி ஆனதாகப் பொய் பரப்பியது போன்ற இழிசெயல்கள்] இவர் இன்று தொடங்கிய சட்டமன்ற நிகழ்வில் தமிழரின் தன்மான உணர்வைச் சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்[தமிழரின் பண்பாடு கருதி அநாகரிகமான மொழிநடை கையாளப்படவில்லை].
தமிழருக்கு அவர்தம் மொழியும் இனவுணர்வும் இரு கண்கள் என்பதை.....
தமிழரின் தன்மான உணர்வைச் சிதைப்பதற்கென்றே இவருக்குக் ‘கங்கணம்’ கட்டி அனுப்பிய மேலிடத்தார் ஏனோ மறந்துவிட்டார்கள்.
மறந்துவிட்டார்கள் என்பதைவிடவும், தமிழராகப் பிறந்து தமிழருக்கு எதிராகச் செயல்படுவதற்கென்றே தங்களை அர்ப்பணித்துக்கொண்ட தமிழினத் துரோகிகள் தரும் தன்னம்பிக்கைதான் காரணம் என்று சொல்லலாம்.
ஆளுநரின் செயல்பாடுகள் அவருக்கும் மேலிடத்தாருக்கும் நன்மை பயக்குமோ அல்லவோ, இந்தியா என்னும் நம் நாட்டுக்கு நல்லதல்ல!
* * * * *