செவ்வாய், 7 ஜனவரி, 2025

தமிழ்த்தாய் வாழ்த்தும் தமிழை அவமதிக்கும் தி.மு.கழகமும்!!!

மக்குரியரையைப் படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சட்டமன்றத்திலிருந்து வெளியேறிய நிலையில், இன்று சென்னையில் பல்வேறு பகுதிகளில், 'GETOUTRAVI'[Get Out Ravi, கெட் அவுட் ரவி] என்று ஆளுநரைக் கண்டித்துச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன என்பது செய்தி[https://tamil.oneindia.com]

இது ஏற்புடையதல்ல; சுவரொட்டிகள் ‘வெளியேறு ரவி’ என்று தமிழில் எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.

தமிழ் வழியாக எதிர்ப்பைத் தெரிவித்தாலும், ஆங்கிலத்தில் அது,  ‘GO OUT RAVI'  என்று மொழியாக்கம் செய்யப்பட்டு ஆளுநரின் கவனத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கும் என்பது உறுதி.

சட்டமன்ற நிகழ்வின்போது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் ஒலிக்க வேண்டும் என்று முழக்கமிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தவர், சுவரொட்டிகளில் தமிழைப் புறக்கணித்தது கண்டிக்கத்தக்கது.

ஆங்கிலத்தைப் புறக்கணிப்பதில் அத்தனை விருப்பம் இல்லை என்றால்.....

‘வெளியேறு ரவி[GETOUTRAVI > Get Out Ravi] என்பதாக ஆங்கிலச் சொற்களை அடைப்புக் குறிகளுக்குள் சேர்த்திருக்கலாம்.

இம்மாதிரியான சறுக்கல்கள் இனியேனும் தவிர்க்கப்படுதல் வேண்டும் என்பது ‘தி.மு.க.’ தலைமைக்கு நாம் வழங்கும் பரிந்துரை. 

                                     *   *   *   *   *

https://tamil.oneindia.com/news/chennai/governor-r-n-ravi-walks-out-of-tamil-nadu-assembly-dmk-protests-erupt-with-getoutravi-posters-669165.html