புதன், 8 ஜனவரி, 2025

ஆளுநரை விமர்சிக்கும் ஆபாசக் காணொலி! தி.மு.கழகத்திற்கு இது அழகல்ல!!

ற்று முன்னர் ‘யூடியூப்’இல், கருத்துச் செறிவுள்ள காணொலிக்காக[பார்வையாளர் எண்ணிக்கையைக் கூட்டக் கவர்ச்சித் தலைப்புக் கொடுத்து ஏமாற்றும் கழிசடைக் காணொலியர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது] இரு கண்களிலும் விளக்கெண்ணை விட்டுத் தேடிக்கொண்டிருக்கையில், கீழ்க்காணும் காணொலியைக் காண நேர்ந்தது.

ஆளுநர் ஆர்.என். ரவி, தனக்குள்ள அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டு, தமிழர்களின் இன உணர்வைச் சிதைக்கும் அடாத செயல்களைச் செய்துகொண்டிருந்தாலும்.....

அவரை ஆபாச வார்த்தைகளால் விமர்சிக்கும் கீழ்க்காண்பது போன்ற காணொலிகளை வெளியிடுவது வரவேற்கத்தக்கது அல்ல; நாகரிகமும் அல்ல.

எதைக் காரணம் காட்டி ஸ்டாலின் ஆட்சியைக் கலைக்கலாம் என்று கண் துஞ்சாமல் காத்திருக்கும் சங்கிகளின் கண்ணில் படுவதற்கு முன்னால், இதை யூடியூப் தளத்திலிருந்து நீக்கிவிடுவது இதை வெளியிட்ட கழகக் கண்மணிக்கும் தி.மு.கழகத்திற்கும் மட்டுமல்ல, மேம்பட்ட நாகரிகத்தின் விளைநிலமான தமிழ் மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மை பயப்பதாக அமையும்.

நன்மை பயக்கிறதோ அல்லவோ தீங்கு விளையாமலிருக்க உதவும்.