எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

கடவுளால் அனுப்பப்பட்ட மோடிஜி 100% உத்தமர் என்பதால்.....

//டெல்லி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி செவ்வாயன்று, ஆம் ஆத்மி கட்சித்(AAP) தலைவர் சவுரப் பரத்வாஜ் வீட்டில் அமலாக்க இயக்குநரகம்(ED) நடத்திய சோதனைகளையும், அவர் மீதான வழக்கையும் ‘ஆதாரமற்றவை’ என்றும், பிரதமர் நரேந்திர மோடியின் ‘கல்விப் பட்டம்’ தொடர்பான சர்ச்சையிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் நடவடிக்கை இது என்றும் கூறினார்// -இது அண்மைச் செய்தி.*

ஒரிஜினல் கடவுளால்[போலிகள் கணக்கிலடங்காதவை] அனுப்பப்பட்டவரும்["I am convinced that I was sent by god. This strength is not from my body....."> Modi] 100% உத்தமரும் நேர்மையானவருமான மோடிஜி உண்மை மட்டுமே பேசி, மக்களுக்கு அருந்தொண்டாற்றுபவர்.

‘அவர் பெற்றிருக்கும் பட்டச் சான்றிதழ்கள்[பி.ஏ., எம்.ஏ.] போலியானவை’ என்று அவரை வீழ்த்த முயலும் சூழ்ச்சிக்காரர்கள் பரப்பியுள்ள வதந்தி உண்மையானதாக இருக்குமோ என்று பொதுமக்கள் சந்தேகப்படும் சூழல் உருவாகியுள்ளதைக் கருத்தில்கொண்டு, அது முழுப் பொய் என்று நிரூபிப்பது அவரின்[நம் பிரதமர்] கடமை என்பதால்.....

அவர் பெற்ற பட்டங்களுக்கான சான்றிதழ்களை, உரிய பாதுகாப்புடன் நாடாளுமன்ற வளாகத்திலேயே பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதோடு, சுதந்திரமாகச் செயல்படும் புலனாய்வுக் குழுவினரைக்கொண்டு ஆய்வு நிகழ்த்தி, குறுகியக் கால அவகாசத்தில்[ஆட்சிக்காலம் முடியும்வரை இழுத்தடிக்காமல்] அறிக்கை வெளியிடச் செய்வார் என்று நம்பலாம்[சிவசேனா(UBT) தலைவர் சஞ்சய் ராவத் ஏப்ரல் 3 அன்று பிரதமர் நரேந்திர மோடி தனது கல்வித் தகுதி குறித்துத் தெரிவிக்க முன்வர வேண்டும் என்றும், அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்> இந்து தமிழ்].

வாழ்க மோடி பி.ஏ.! வளர்க மோடிஜி எம்.ஏ.!!

*https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/to-divert-attention-from-modi-jis-degree-atishi-slams-ed-raid-at-saurabh-bhardwajs-residence/articleshow/123520493.cms?from=mdr -Aug 26, 2025