பரவுதல்:
ஹெச்.ஐ.வி தொற்றியுள்ள நபர்களின் ரத்தம், விந்து, பெண் குறித் திரவம், தாய்ப் பால் போன்ற உடலிலுள்ள நீர்மங்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலமும், மருந்துகளைச் செலுத்துவதற்கு அல்லது பச்சை குத்துவதற்கு ஊசிகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலமும் பரவுகிறது.
ஆரம்பத்தில் அறிகுறிகள் லேசானதாக இருப்பதால், எச்.ஐ.வி உள்ளவர்கள் தங்களுக்கு அது இருப்பது தெரியாமல் இருக்கலாம். அந்நிலையில் அது மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது.
கீழ்க்காணும் காரணங்களால் பரவுவது இல்லை.
ஒரே காற்றை சுவாசித்தல்,
கட்டியணைத்தல், முத்தமிடுதல், கைகுலுக்குதல்,
நீர்நிலைகளில் ஒன்றாகக் குளித்தல்,
பிறர் கையாண்ட ஜிம் உடற்பயிற்சி கருவிகள், கழிவறை இருக்கை போன்றவற்றைப் பயன்படுத்தல்.
மற்றவர்கள் தொட்ட கதவின் குமிழ், கைப்பிடி முதலானவற்றைத் தொடுதல்.
சிறுநீர், மலம், எச்சில், இருமல், தும்மல், வாந்தி, வியர்வை(ரத்தம் இல்லாதவரை) போன்றவை; குடிக்கும் கோப்பைகள் அல்லது சாப்பிடும் பாத்திரங்களைப் பகிர்ந்துகொள்ளுதல்.
- நோயின் அறிகுறிகள்:
காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாந்தி, விழுங்குவதில் சிரமம், தொண்டைப் புண், தடிப்புகள், வீங்கிய நிணநீர் கணுக்கள்.