செவ்வாய், 4 மார்ச், 2025

திருமணமும் உடலுறவும் நிலை தடுமாறும் குடும்ப உறவும்!!!

ம்பதியர் விவாகரத்துச் செய்துகொள்வதற்கான காரணங்கள் பல உள்ளன{குறட்டைவிடுவது, ஒழுங்காகக் குளிக்காதது, அடிக்கடி மூக்கை நோண்டுவது, பல்லிடுக்கில் சிக்கிய உணவுத் துணுக்கை நோண்டி எடுத்து முகர்ந்து பார்ப்பது[ஹி... ஹி... ஹி!!!] என்றிவை உட்பட}.

இவற்றுள் உடலுறவு கொள்வதில் போதிய அக்கறை காட்டாததும் ஒன்று.

'இல்லற வாழ்க்கையில் ஒருவர் தனது இணையருடன் உடலுறவு கொள்ளாமல் நீண்ட நாட்கள் விலகி இருந்தால், அது இந்து[மற்ற மதங்களும்தான்] திருமணச் சட்டத்தின் கீழ் கொடுமையான விஷயமாகக் கருதப்படும். அத்துடன் இதையே காரணமாகக் கூறி ஒருவர் விவாகரத்து கோரலாம்' என்று இது தொடர்பான பல வழக்குகளின் தீர்ப்புகளில் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்திருக்கின்றன’ என்பது நான் எப்போதோ வாசித்த ஒரு செய்தியின் சாரம்.

உடலுறவைத் தொடர்புபடுத்தி ஒருவர் விவாகரத்துக் கோரிய ஒரு வேடிக்கையான வழக்கு பற்றிச் சற்று முன்னர் அறிய நேர்ந்தது.


//தனது மனைவி 5 மாதங்களில் தன்னுடன் 10-15 முறைதான் உடலுறவு கொண்டிருந்தார். அத்துடன் உடலுறவின்போது அவர் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் ஒரு ‘ஜடம்’ போல் இருப்பார் என்பது மணவிலக்குக்கான காரணமாக விவாகரத்து கோரிய வழக்கில் ஒரு நபர் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு அதற்கான அனுமதியை வழங்கினார் நீதிபதி// என்பது செய்தி[https://www.bbc.com/tamil/articles/cek19mz00vvo


இதே நீதிபதி[டெல்லி உயர் நீதிமன்றம்], 2012ஆம் ஆண்டில், முதலிரவில் மனைவி உடலுறவுக்கு மறுத்ததற்காக அவளின் கணவருக்கு விவாகரத்துச் செய்துகொள்ள அனுமதி வழங்கினார்.


“உடலுறவு சார்ந்த பிரச்னைகளின் காரணமாக அதன் புனிதத்தன்மை கெட்டுவருவதுடன், திருமணப் பந்தத்தின் உத்வேகமும் குறைந்துவருகிறது என்றும், இதன் விளைவாகப் பாலினப் பாகுபாடற்ற திருமணங்கள் தொற்றுநோய் போலப் பரவி வருவதை யாராலும் தடுக்க முடியாது” என்றும் நீதிபதி தம் வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.

* * * * *

நாடு போகிற போக்கைப் பார்த்தால், ஒரு மாதத்தில் தம்பதியர் கொள்ளும் உடலுறவுக்குக் குறைந்தபட்ச வரம்பு விதிக்கும் காலமும் வரும் என்று தோன்றுகிறது.


‘திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன’ என்று சொல்லிப்போன அந்தக் கூமுட்டை யார்?!