ஞாயிறு, 2 மார்ச், 2025

சிந்திப்பாரா ‘பிறவி இந்து’ சிவக்குமார்[கர்னாடகா து.முதல்வர்]?!?!?

#புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பின்போது சிவகுமாரிடம்[கர்னாடகா துணை முதல்வர்], அவரது கோவை வருகை[ஈஷா நவராத்திரிக் கூத்து]  குறித்துச் செய்தியாளர்கள் கேட்டபோது, ​​ "..... நான் ஒரு இந்து. நான் பிறந்தது இந்துவாக. நான் ஒரு இந்துவாகவே இறப்பேன் என்று அவர் கூறினார்# [https://english.varthabharati.in/karnataka/i-am-born-hindu-and-will-die-hindu-karnataka-dcm-shivakumar].

அன்புக்குரிய கன்னடச் சகோதரர் சிவக்குமார் அவர்களே,

உங்களுடைய இந்துமதப் பற்றைப் பாராட்டுகிறோம்.

ஆனால், நீங்கள் பிறந்தபோதோ, வளர்ந்து சிந்திக்கும் பருவத்தை எட்டும்வரையோ நீங்கள் ஒரு மனிதப் பிறவி என்பதேகூட உங்களுக்குத் தெரியாது என்று நாம் சொன்னால் அதை மறுக்கமாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

அறிவு வளரும் வயதில் நீங்கள் ஒரு இந்துக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதையே உங்களின் பெற்றோர் சொல்லித்தான் அறிந்துகொண்டிருப்பீர்கள். அவர்கள் சொன்னதை வைத்துத்தான் “நான் பிறந்தது இந்துவாக” என்று சொல்லியிருக்கிறீர்கள். இது ஒரு பொருட்டல்ல.

“நான் இந்துவாகவே இறப்பேன்” என்று உறுதி மொழிந்திருக்கிறீர்களே, இங்கேதான் தவறிழைத்திருக்கிறீர்கள்.

இறப்பு என்பது மூளை உட்பட உடல் உறுப்புகள் முற்றிலுமாய்ச் செயலிழக்கும்போது நிகழ்வது. அதாவது, அந்த நேரத்தில் முழுமையாகச் சுயநினைவை இழக்கிறோம்.

இறப்பது மனிதனாகவாக, மிருகமாகவா வேறு எதுவாகவும் ஆகவா என்பது பற்றியெல்லாம் சாகும்போது அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. இருந்துகொண்டிருந்தவர் ‘இல்லாமல்’ ஆகிறார் என்பதே உண்மை.

அறிவு, உணர்ச்சி, குணம் என்று பெற்றிருந்த அனைத்தையும் இழந்து நாம் ‘வெறுமை’யில் கலக்கும் நிலையில் மதம் இல்லை; ஒரு மண்ணும் இல்லை.

இவ்வாறெல்லாம் சிந்தித்திருந்தால்.....

“அவர்[சத்துக்குரு] எனக்குத் தெரிந்தவர்; நேரில் வந்து அழைத்தார். போனேன். சொல்வதற்கு வேறு எதுவுமில்லை” என்று சொல்லிப் பேட்டியை முடித்துக்கொண்டிருப்பீர்கள்.

மாறாக, அந்த வேடதாரியை வெகுவாகப் புகழ்ந்திருப்பது உங்கள் மீதான மதிப்பை மிகவும் குறைத்திருக்கிறது.

கடவுளுக்குக் குரு[சத்குரு: சத்> பரம்பொருள்> கடவுள்; சத்குரு> கடவுளுக்குக் குரு] என்று புளுகி[உலகின் நம்பர் 1 புளுகன்] உலகின் ஒட்டுமொத்த மக்களையும் முட்டாள்களாக்கி, கோடி கோடியாய்ப் பணம் கொள்ளையடித்துச்[+ஏராள குற்றச்சாட்டுகள்] சொகுசாக வாழும் ஓர் அயோக்கியனுடனான உங்களின் தொடர்பு நீடித்தால், விளைவு என்னவாக இருக்கும் என்பதைச் சிந்தித்து அறியும் அறிவு உங்களுக்கு உண்டு என்று நம்புகிறோம்.

கர்னாடகச் சகோதரர்களுக்கான உங்களின் தொண்டு தொடர்வதாக.