சனி, 21 பிப்ரவரி, 2015

பதிவர்களுக்குப் புத்தி சொல்லி மாட்டிக் கொண்ட ‘பசி’பரமசிவம்!!!

‘இலக்கணம் பயின்றவர்களையே திணறடிப்பது இந்தச் சந்தி! இதன் பொருட்டு வெகுவாக அலட்டிக்கொள்ள வேண்டாம்’ என்று, பதிவர்களுக்கான பரிந்துரைகளில் இதனையும் ஒன்றாகக் குறிப்பிட்டிருந்தேன். இத்துடன் நில்லாமல், பதிவின் அடிக்குறிப்பாக, பிழை காணின் மன்னியுங்கள்; திருத்துங்கள்’ என்று சொல்லப்போய் வசமாக மாட்டிக்கொண்டேன்.

பதிவுலக நண்பர்களின் பாராட்டுகளுக்கிடையே, ஒரு நண்பர்[அவர் மனதை ஏற்கனவே நான் நோகடித்திருப்பதால், மீண்டும் பெயர் குறிப்பிட்டு அதைச் செய்ய விரும்பவில்லை],  ‘இந்தப் “ பத்து பரிந்துரைகள் “ என்பதும் கூடப் “ பத்துப் பரிந்துரைகள் “ என்று ஒற்று மிகுந்தே வரும் என்பார்கள் பண்டிதர்கள்’ என்பதாகத் தம் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அவருக்கு, ‘பத்துப் பத்தாக’ என்கிறபோது மிகும். ‘கறுப்புக் குதிரை’ என்னும்போதும் மிகும். இப்படிப் பல உதாரணங்கள் தரலாம்.

‘எட்டு கோடி’யை, ’எட்டுக் கோடி’ என்று நான் அறிந்த வகையில், மறைமலை அடிகள், மு.வ., திரு. வி. க. போன்ற அறிஞர்கள் எவரும் எழுதியதாகத் தெரியவில்லை.

எட்டு கோடி, பத்து பூக்கள் என்றுதான் உச்சரிக்கிறோமே தவிர, எட்டுக் கோடி, பத்துப் பூக்கள் என்று எவரும் உச்சரிப்பதில்லை.

தலைப்பிடும்போது இது பற்றி நன்கு யோசித்தே முடிவெடுத்தேன்’ என்று பதிலளித்தேன்.

அதற்கு அவர் தந்த மறுப்புரைகளுக்கிடையே, "நீங்கள் கூறிய திருவிக , முவ முதலானோரின் படைப்புகளைப் படித்திருக்கிறேன். ஆனால் நீங்கள் எட்டு கோடி, பத்து பூக்கள்  என இவர்கள் குறித்துள்ளதாகக் காட்டும் இடம் எங்கெனத் தெரியவில்லை. சுட்டிக் காட்டுங்கள்" என்றார்.

பதிவர்களுக்குப் ‘பரிந்துரை’ என்ற பெயரில் புத்தி சொல்லப்போய் எத்தனை பெரிய வம்பில் மாட்டிக்கொண்டேன் பார்த்தீர்களா?!

ஆறு ஆண்டுகள்[4{Vidwan-Madras Versity}+[B.O.L{Exempted-Annamalai}+2[M.A.{Dept.of Tamil Research, Kerala}]+Ph.D[Madras] கல்லூரிகளில் முறையாகத் தமிழ் இலக்கணம் பயின்றவன் நான் என்றாலும், அதனுடனான தொடர்பு விட்டுப்போய்ப் பல ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், நான் திகைத்தேன் என்பது உண்மை.

பல ஆண்டுகளாக, கடவுள் தத்துவம், வாழ்வியல், புனைகதைகள் என்று என் எழுத்தார்வம் முற்றிலுமாக இலக்கணத்திலிருந்து விடுபட்டுவிட்ட நிலையில், சான்று தேடும் முயற்சி மேற்கொள்ளுவதை நான் விரும்பவில்லை என்பதும் உண்மையே. இலக்கணப் புலமை வாய்ந்த அறிஞர்கள் ‘ஒற்று’ சேர்த்து எழுதியிருந்தாலும், அதில் குற்றம் காண இயலாது என்பதையும் நான் அறிவேன்.

சான்றுகள் கிடைக்கலாம்; கிடைக்காமலும் போகலாம் என்ற நிலையில், ஏதோ ஒருவித மன நிலையில், வலைப்பதிவை முடக்கிவிட்டு, ‘பத்து பரிந்துரைகள்’ பயன்பாடு குறித்துக் கூகிளில் தேடினேன்.

நான் கொஞ்சமும் எதிர்பாராத வகையில், பல வலைத்தளங்களில் ‘பத்து பரிந்துரைகள்’[‘ப்’ சேர்க்காமல்] இடம்பெற்றிருப்பதை அறிய முடிந்தது. 

சான்றுகள்:


* 
-ta.wikipedia.org/wiki/86வது_அகாதமி_விருதுகள்
86வது அகாதமி விருதுகளுக்கான பரிந்துரைகள் சனவரி 16, 2014 அன்று அறிவிக்கப்பட்டன.அமெரிக்கன் ஹஸ்சில் மற்றும்கிராவிட்டி திரைப்படங்கள் அதிகபட்சமாக பத்து பரிந்துரைகள் பெற்றன.[10][11]


*...நாணயம் விகடன் - 21 Aug, 2011
       பங்குச் சந்தை
ஐந்து நிபுணர்கள்... பத்து பரிந்துரைகள்!
www.vikatan.com/new/article.php?module=magazine&aid=9360

* பொன்ஸ்பக்கங்கள் https://poonspakkangkal.wordpress.com/page/31/?archives-list=1
‘....கிட்டத்தட்ட தினம் பத்து பரிந்துரைகள் தரும் கில்லியிலிருந்து சுமார் பத்து வாசகர் பரிந்துரைகள் எடுத்துக் கொடுக்கச் சொன்னார் பிரகாஷ்.. அதனால் சமீபத்துப் பரிந்துரைகள் சிலவற்றை மட்டுமே இங்கே பட்டியலிட்டுள்ளேன்...’



*
 nonono-no-no.blogspot.com/2010/06/blog-post.html

பரிந்துரை விளையாட்டு!!!

ஓர் அறிவாளி தன் பதிவில் ஒரு நாலு லிங்க்கு போட்டுதோ படியுங்கள் என்று எழுதுகிறார்அதற்கு ஒரு பத்து பரிந்துரைகள்கவனிக்க 
வேண்டியதுஇந்த அசுரத்தனமான அல்ப ஆசாமிக்கு முகமூடி மட்டும் தேவை...! 


* www.thinnai.com/index.php?module=displaystory&story_id.
சாகித்திய அகாதமிக்குச் சில பரிந்துரைகள் ‘.....பத்து பெயர்களையும் புத்தகங்களின் பெயர்களுடன் பரிந்துரைக்கவும்....’ 


* www.semparuthi.com/?p=17774
·          

பிஎஸ்சியின் பரிந்துரைகளை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது

·         Thursday, Dec 1, 2011 11:00 pm
டிச., 2011 - பத்து பரிந்துரைகள்: 1. அழியா மை அறிமுகம்;. 2. பாதுகாப்புப் பணியாளர்கள்ஆயுதப் படையினர் ஆகியோர் முன்னதாக வாக்களிக்கும் ...


* 

சிறப்புப் பிரிவு மாணவர்கள் 7 பேர் ...

www.dinamani.com/education/career.../2014/.../article2595448.ece
o     
சிறப்புப் பிரிவு மாணவர்கள் 7 பேர் பத்து பதக்கங்கள். By dn. First Published : 30 December 2014 02:53 PM IST. புகைப்படங்கள்பள்ளி மாணவர்கள் ...பரிந்துரைகள்  ...



தேசிய இனப்பிரச்சினைக்கான ...

www.nitharsanam.net/47292/news/47292.html
o     
தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டப் பரிந்துரைகள் ...தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் பத்து தமிழ் அரசியல்.....


*  

 திருச்சபையில் புதிதாக ...

uk.radiovaticana.va/articolo.asp?c=359242
o     
23 பிப்., 2010 - ... ஆயிரக்கணக்கான மக்கள் கத்தோலிக்கத் திருச்சபையில் இணையவுள்ளதையடுத்து அந்நாட்டு ஆயர் பேரவை பத்து பரிந்துரைகள்... 



ஒட்டகத்துக்கு நடந்தது என்ன?

dondu.blogspot.com/2010/06/blog-post.html
o     ஜூன், 2010 - அதற்கு ஒரு பத்து பரிந்துரைகள்! கவனிக்க வேண்டியதுஇந்த அசுரத்தனமான அல்ப ஆசாமிக்கு முகமூடி மட்டும் தேவை!



* 

டாடா ஏஸ் கவிழ்ந்து பத்து பேர் ...

www.dinamalar.com/district_detail.asp?id=1188307
o     22 மணிநேரம் முன்பு - டாடா ஏஸ் கவிழ்ந்து பத்து பேர் காயம். Advertisement. Advertisement. அதிகம் ...  


இத்தாலிக்கான ஆஸ்கர் ...
tamil.webdunia.com/.../இத்தாலிக்கான-ஆஸ்கர்-ரி...

24 செப்., 2012 - இத்தாலிக்கான ஆஸ்கர் ரிந்துரைகள்திங்கள், 24 ...கேங்ஸ் ஆஃப் வாஸேபேர் என்று பத்து படங்களைத் தேர்வு செய்தார்களே..

இரகுராம் ராஜன் குழு பரிந்துரை ...
www.pathivu.com/news/27205/95//d,article_full.aspx
o     
28 செப்., 2013 - இரகுராம் ராஜன் குழு தனது பரிந்துரையைக் கடந்த செப்டம்பர் 2 ஆம் ... போக்குவரத்து வசதிகள் ஆகிய பத்து கூறுகளில் ஒரு மாநிலம்  ...




o   தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டப் பரிந்துரைகள் .........தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் பத்து தமிழ் அரசியல்...


www.bbc.co.uk/tamil/india/2012/12/121209_coconuttreeclimbing.shtml
o     டிச., 2012 - ... குறைந்தபட்சக் கூலி மரத்துக்கு இரண்டு ரூபாய் பத்து காசுகள் அல்லது ...


மிகப் பழைமையான தொல்காப்பியத்தின் வழி நூலும், 12ஆம் நூற்றாண்டில்[?] எழுதப்பட்டதுமான ‘நன்னூல்’ என்னும் இலக்கண நூலே இன்றளவும் இலக்கணம் பயில்வோருக்கு அரிய வழிகாட்டியாகத் திகழ்கிறது.  அதைச் சார்ந்துதான் தமிழ் இலக்கணம் கற்றவர்கள் விவாதம் மேற்கொள்கிறார்கள்.


தமிழ் மொழி வெகுவாகத் திரிபடைந்துவிட்ட நிலையைக் கருத்தில் கொண்டு அது போன்றதொரு அல்லது அதனினும் சிறந்த நூல் இன்றளவும் எழுதப்படவில்லை என்பது  [பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் தேவை] உண்மை. இது ஒருபுறம் இருக்க........

இன்றைய[ ‘க்’?] காலக்கட்டத்தில், ’எட்டு கோடி, பத்து பூக்கள் என்றுதான் உச்சரிக்கிறோமே தவிர, எட்டுக் கோடி, பத்துப் பூக்கள் என்று எவரும் உச்சரிப்பதில்லை’ என்று நான் குறிப்பிட்டதை மேற்கண்ட சான்றுகள்[பெரும்பான்மை] உறுதிப்படுத்துகின்றன.

இலக்கணம் அறிந்தவர்கள் மட்டுமே ‘ஒற்று’ சேர்க்கிறார்களே தவிர, ஒற்று சேர்க்காமல் எழுதும் நிலையே மிகப் பெரும்பான்மையாக உள்ளது. அந்தப் பெரும்பான்மையைக் கருத்தில் கொண்டுதான்[ஏற்கனவே அனுபவ அறிவால் உண்டான நம்பிக்கை], ‘பத்து பரிந்துரைகள்’ என்று எழுதியபோது, ‘ப்’ என்னும் ஒற்று சேர்ப்பதைத் தவிர்த்தேன் என்பதை இலக்கணத்தில் ஈடுபாடு கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் தெரிவிக்கிறேன்.

விவாதத்தில் வெற்றி ஈட்டும் நோக்கமெல்லாம் எனக்கு இல்லை; எவரையும் புண்படுத்தும் எண்ணமும் இல்லை என்பதையும் இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

வருகை புரிந்த அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றி.















·          
·          



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக