ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

மோடிக்கு விலங்கு மாட்டிய விகடன் கார்ட்டூன்... ஒன்று போதாது! ஓராயிரம் தேவை!!

ரைக் கிறுக்கனும் அமெரிக்க அதிபனுமான டொனால்டு டிரம்பின்[‘ஜோ பைடன்’ போட்டியிட்டிருந்தால் இவன் தோற்றிருப்பான்] முன்னிலையில், ‘கை கால்’ விலங்கு பூட்டப்பட்ட பரிதாபக் கோலத்தில் நம் பிரதமர் மோடி அவர்கள் காட்சியளிக்கும் கார்ட்டூனைத் தமிழின் முன்னணி இணையத்தளமான ‘விகடன்’ வெளியிட்டுள்ள நிலையில், அந்தத் தளம் நடுவணரசால் முடக்கப்பட்டது என்பது நேற்றையச் செய்தி.

கார்ட்டூன் உருவானதன் பின்னணி பலரும் அறிந்ததே.

அது.....

‘அனுமதியின்றி அமெரிக்காவில் குடியேறியவர்களில்[தண்டனைக்குரிய வேறு குற்றங்களில் ஈடுபடாதவர்கள்] 104 பேருக்குக் கை கால்களில் விலங்கு பூட்டி, இந்தியாவுக்கு[அமெரிக்காவின் ராணுவ விமானத்தில்] அனுப்பப்பட்டார்கள்’[இதுவும் அவமானப்படுத்தும் செயல்தான்] என்பது.

104 பேருக்கு என்றில்லை, ஒரே ஒரு இந்தியனுக்கு இந்த அவமானம் இழைக்கப்பட்டிருந்தாலும், ஒட்டுமொத்த இந்தியாவின் அடையாளமான நம் பிரதமர் மோடிக்கே இது இழைக்கப்பட்டதாகக் கருதுதல் வேண்டும்.

ஆம். கிறுக்கன் டிரம்ப், மோடியின் கை கால்களுக்கு[+கழுத்துக்கு?] விலங்கு பூட்டித் தன் ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு அனுப்பினான் என்றே நாம் கருதுதல் வேண்டும். 

இந்த மிக இழிந்த குற்றச் செயலுக்காக விமானத்தைத் திருப்பி அனுப்புவதோடு[குட்டி நாடு கொலம்பியா இதைத்தான் செய்தது; பின்னர் இரு நாடுகளுக்குள்ளும் உடன்பாடு ஏற்பட்டது]  டிரம்பை மன்னிப்புக் கேட்கச் செய்த பிறகே நம் மக்களைத் திரும்பப் பெற்றிருத்தல் வேண்டும்.

மன்னிப்புக் கேட்க மறுத்திருந்தால் அமெரிக்கா மீது போர் தொடுப்பதாக அறிவித்திருத்தல் வேண்டும். நம்மை விடப் பலம் வாய்ந்தவன் என்பதால் வாய் பொத்தி மௌனம் சுமந்தாரா நம் பிரதமர் மோடி? இந்தியர்களுக்கு மானம் ரோஷம் என்பதெல்லாம் இல்லையா?[அமெரிக்கா சென்று அவனைச் சந்தித்து விருந்துண்டது இந்த இந்திய மண் அடைந்திராத மிகப் பெரிய அவமானம்].

தமக்கு[நமக்கானதும் ஆகும்] நேர்ந்த அவமானத்தைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், ஒரு ஊடகத்தில்[விகடன்] வெளியான கார்ட்டூனுக்காக அதை முடக்குவது[பொது அறிவோ சிந்திக்கும் ஆற்றலோ இல்லாத நபரின் பரிந்துரை] என்பது கற்பனைக்கெட்டாத கோழைத்தனம் ஆகும்.

இதை அறியச் செய்யும் வகையில் ‘விகடன்’ மட்டுமே கார்ட்டூன் வெளியிட்டது. இது போதாது; ஆட்சியாளர்களின் தன்மானத்தைத் தட்டி எழுப்ப இன்னும் ஓராயிரம் கார்ட்டூன்கள் தேவை!

                                  *   *   *   *   *

சற்று முன்னர் வெளியான காணொலிச் செய்தி: