சனி, 15 பிப்ரவரி, 2025

கும்பமேளா... இன்னும் எத்தனைப் பக்தர்களைச் சொர்க்கம் அனுப்புவீர்கள் மோடி?!

மாநிலங்களவையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, ​​சிவசேனா(UBT) எம்பி சஞ்சய் ராவத், ஜனவரி 29 அன்று கும்பமேளாவில் "2,000 பேர் இறந்தனர்" என்று கூறியிருக்கிறார்[https://www.thehindu.com].

“புனித நீராடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறந்தார்கள்’ என்றார் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே. நீங்கள் உண்மையான சாவுக் கணக்கைச் சொல்லாத நிலையில், உங்களின் அல்லக்கைகள் கார்கே அவர்களை வசைபாடினார்கள்.

//உத்தர பிரதேச மகாகும்பமேளாவில் கலந்து கொள்வதற்காகச் சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் காரில் புறப்பட்டுச் சென்றனர். ​​அவர்களுடைய கார் பிரயாக்ராஜ்-மிர்சாபூர் நெடுஞ்சாலையில் உள்ள மேஜா பகுதியில் அதிகாலை 2.30 மணியளவில் பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் காரில் பயணித்த 10 பேரும் உயிரிழந்தனர்// இது அண்மையில் வெளியான ஊடகச் செய்தி[https://www.dinakaran.com]

//மகா கும்பமேளா | டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 18 பேர் பலி![https://www.puthiyathalaimurai.com/india/kumbh-mela-stampede-at-delhi-railway-station-15-people-including-3-children-killed// இது சற்று முன்னரான செய்தி.

ஊடகத் தகவல்கள் இவ்வாறிருக்க, என்னதான் நீங்கள் இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை மூடி மறைத்தாலும், புனித நீர் என்னும் அழுக்கு நீராடலை முன்னிட்டு ஆயிரக்கணக்கானவர் இறந்திருக்கிறார்கள் என்றே மக்கள் நினைக்கிறார்கள்.

உங்கள் மொழியில் சொன்னால்.....

பல்லாயிரவர் ‘சொர்க்கம்’ சேர்ந்திருக்கிறார்கள்.

ஆக, கும்பமேளா கொண்டாட்டம் காரணமாகப் பெரிதும் நன்மையே விளைந்திருக்கிறது என்று உறுதிபடச் சொல்லலாம்.

இந்நிலையில்,

தங்குதடையில்லாமல், கட்டுப்பாடுகள் ஏதுமின்றிப் பக்தர்கள் கும்பமேளாவுக்குச் செல்ல ஏராள வசதிகளைச் செய்துகொடுத்த தாங்கள், இன்னும் எத்தனை ஆயிரம் பேர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பத் திட்டம் வகுத்துள்ளீர்கள் என்பதை அறிந்திடப் பேரார்வத்துடன் காத்திருக்கிறார்கள் நம் மக்கள்.

எண்ணிக்கை குறித்த அறிவிப்பை வெளியிடுவீர்களா மோடிஜி?!

                                  *   *   *   *   *

https://www.thehindu.com/news/national/government-hiding-kumbh-stampede-death-toll-opposition/article69180418.ece

https://indianexpress.com/article/india/thousands-died-in-stampede-at-kumbh-mallikarjun-kharge-sparks-row-9815927/

https://www.dinakaran.com/kumbh-mela-devotees-accident-death/amp/