பல துறைகளையும் சார்ந்த முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அமைப்புகளில் ‘Y' பிரிவும் ஒன்று.
இது ‘அமித்ஷு’ கைவசம் உள்ள ஒன்றிய உள்துறையால் வழங்கப்படுவது.
இதற்கான ஒரு மாதச் செலவு ரூ12 லட்சம்[குடிமக்கள் வரிப்பணம்].
Y பிரிவில் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு அதிகாரிகள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் பிரமுகருக்குப் பாதுகாப்பு அளிப்பார்கள்; 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்கப்படும்.
ஒரு கூத்தாடியாய்க் கோடி கோடி என்று சம்பாதித்து, திரைப்பட வாய்ப்புப் பறிபோன நிலையில், மீண்டும் கோடி கோடிகளாய் வருவாய் ஈட்டும் திட்டத்துடன் கட்சி தொடங்கியுள்ள மாஜி நடிகர் ‘விஜய்’க்கு இந்த வகைப் பாதுகாப்பு வழங்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது[https://tamil.asianetnews.com/tamilnadu/tamilaga-vettri-kazhagam-leader-vijay-gets-y-category-security-tvk-srnlm4].
கட்சி ஆரம்பித்துப் பல மாதங்கள் ஆகியும் அரசியலில் அழுத்தமாகக் கால் பதிக்கும் வகையறியாமல், வெறும் அறிக்கைகள் மட்டும் வெளியிட்டு வெற்று அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் இவருக்கு, பிரபல அரசியல் புரோக்கர் பிரசாந்த் கிஷோர் மூலம் ‘வலை’ வீசியது ‘பாஜக’.
காலாவதியான முன்னாள் பிரபல நடிகன் என்பதைத் தவிர, 'y' பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கான எந்தவொரு தகுதியும் இவருக்கு இல்லை, ஒரே ஒரு தகுதியைத் தவிர. அது.....
செய்கிற வேலைக்கு{சீமான் என்னும் சைமனைப்[கிறிஸ்தவன்> நெற்றியில் திருநீர்ப் பட்டை போட்டு, இந்துவாக நடிப்பதில் கில்லாடி] போல, தமிழரின் இனப்பற்றைச் சீரழிப்பது} ஏற்ற கூலியைப் பெற்றுக்கொண்டு ‘பாஜக’ சங்கிகளுக்குச் சேவகம் செய்வது.
நல்ல வாய்ப்புதான். சினிமாவில் சம்பாதித்ததைவிடவும் பல மடங்கு சம்பாதிக்கலாம்.
வாழ்க பிரசாந்த் கிஷோர்! வளர்க தரகுத் தொழில்!!