ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

புருஷன் குடிகாரனா? பெண்டாட்டி உஷார்!... உஷார்!!...உஷார்!!!

இது, குமுதம்[08.09.2010] இதழில் வெளியானது. ஒரு பக்கக் கதையின் தரத்தை இது உயர்த்துகிறதா, தாழ்த்துகிறதா? வாசித்துப் பின் யோசியுங்கள்!


கதைத் தலைப்பு:                    அப்படிப்போடு

“கொட மிளகா பஜ்ஜி போடுன்னு ஒரு மாசமா சொல்லிட்டிருக்கேன். காதுல போட்டுக்க மாட்டேங்குற.” கண்ணுச்சாமியின் குரலில் ஏக்கம் கலந்த வருத்தம்.

“யோவ், முந்தா நாள் போட்டேனே. போடப் போடத் தின்னு தீர்த்தியே, மறந்து போச்சா? என்றாள் கல்யாணி.

“ஏண்டி பொய் சொல்றே?”

“நான் எதுக்குப் பொய் சொல்லணும்? பத்து நாள் முந்தி, சுடச்சுடக் குழிப் பணியாரம் வேணும்னே. போட்டுத் தந்தேன். வயிறு முட்டத் தின்னே. அடுத்த நாளே, ‘பணியாரம் கேட்டேனே, ஏன் போடலைன்னு கோபப்பட்டே. நல்லா போதை ஏத்திட்டு வந்து திங்கறே. தூங்கி முழிச்சா எல்லாம் மறந்து போயிடுது!” முகம் சிவக்கச் சொன்னாள் கல்யாணி.
“என்னை மன்னிச்சுடு புள்ள.” குழைவாகச் சொல்லிக்கொண்டே, உடம்பெங்கும் காமம் பரவ, கண்கள் கிறங்கக் கல்யாணியின் கை பற்றினான் கண்ணுச்சாமி.

வெடுக்கெனக் கையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்ட கல்யாணி, “குடிச்சிட்டு வந்து ‘அது’க்காக என்னைத் தீண்டுறதை இனி மறந்துடு. நான் கர்ப்பம் ஆயிட்டா, ‘உன்னை நான் தொடவே இல்லை’ன்னு கூசாம பொய் சொல்லுவே” என்று கடுகடுத்தாள் கல்யாணி.

குடிசையின் ஒரு மூலையில் சுருண்டு படுத்தான் கண்ணுச்சாமி.

*****************************************************************************************************************************************************


10 கருத்துகள்:

  1. குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சுன்னு சொல்றது சரிதானே ?
    அசல் குமுதம் பிராண்ட் கதை :)
    த ம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குமுதம் கடந்த இரண்டு ஆண்டுகளா நம்மைக் கண்டுக்கிறதே இல்லை!?

      நன்றி பகவான்ஜி.

      நீக்கு
  2. நகைச்சுவையாயினும் சிந்திக்க கூடிய மனதை கசக்க வைத்த உண்மையும் இருந்தது நண்பரே....
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கணிப்பு மிகவும் சரியானது நண்பரே.

      நன்றி கில்லர்ஜி

      நீக்கு
  3. மனைவி ரொம்ப உஷாராத்தான் இருக்காங்க.
    யோசிக்க வைக்கும் கதை எனக்குப் பிடித்திருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கதை எனக்குப் பிடித்திருக்கிறது//

      மகிழ்ச்சி முரளி...மிக்க நன்றி

      நீக்கு
  4. சரியான கணிப்பு தான்...

    குடியை மனைவியே ஏற்றுக் கொள்வது தான்... - காலக் கொடுமை...

    பதிலளிநீக்கு
  5. ஆமாம் DD. குடிக்கிற பெண்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறதாம். விளைவு...?!

    நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு