“இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஒரு நண்பன். அது பிற இந்திய மொழிகளை வலிமையாக்குகிறது” என்று அமித்ஷா உரையாற்றினார்[இந்து தமிழ்].
இதையே கொஞ்சம் மாற்றி, “ஆங்கிலம் அனைத்து உலக மொழிகளுக்கும் நண்பன். அது அவற்றை வலிமையாக்குகிறது” என்று சொன்னால் அது அனைவரும் ஏற்கத்தக்கக் கலப்படம் இல்லாத உண்மையாக இருக்கும்.
காரணம்.....
ஆங்கிலத்திடமிருந்துதான் பல மொழிகளும் அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான அம்சங்களைப் பெற்றன; பெறுகின்றன.
அமித்ஷாவின் கிளிப்பிள்ளைப் பேச்சு அவருக்குப் பொது அறிவு இல்லை என்பதைக் காட்டுகிறது; தரமில்லாத ஒரு மொழியை[இந்தி] பிற இனத்தவர் மீது திணிக்கும் மொழி வெறியின் அடையாளம் என்றும் சொல்லலாம்.
இவர் தன்னைத் திருத்திக்கொள்வது இந்திய ஒருமைப்பாடு உடைந்து சிதறாமலிருக்க உதவும் என்பதை அவர் உணர்தல் வேண்டும்.
* * * * *