{கீழே இடம்பெற்றிருப்பது[நகல் பதிவில்] ஒரு குற்ற வழக்கில் நீதிபதி அளித்த தீர்ப்பு குறித்த நாளிதழ்ச் செய்தி}
“பெண்ணின் மார்பைப் பிடிப்பது, பைஜாமாவைக் கிழிப்பது போன்றவை பலாத்கார[கற்பழிப்பு] முயற்சி அல்ல” என்று ஒரு தர்ம தேவன் புரட்சிகரமானதொரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.
பெண்ணின் மார்பைப் பிடிப்பது குற்றமில்லை என்றால், அதை அமுக்குவதும், வருடுவதும், தடவுவதும், வாயால் கவ்வுவதும், சுவைப்பதும்தான் குற்றம் என்கிறாரா?
அவளின் பைஜாமாவைக் கிழிப்பது குற்றச் செயல் அல்ல என்றால், அதை அவிழ்த்தெடுத்து அம்மணம் ஆக்குவதுதான்[சிறுமி கூச்சல் போட்டதால் அதைச் செய்ய இயலவில்லை. இது பற்றிச் சிந்திக்கும் அறிவு ஒரு நீதிபதிக்கு இல்லாமல்போனது என்பது பேராச்சரியம்] அதர்மம் என்கிறாரா இந்தக் கலியுக அநீதி தேவன்?
மேற்கண்ட வகையிலான அயோக்கியத்தனங்கள் சமுதாயத்தில் அவ்வப்போது நடப்பவைதான். ஆனால், இந்தவொரு தீர்ப்பு மிக மிக மிக அரிதானதும் அவலமானதுமான ஒன்று.
தீர்ப்பு வழங்கிய நபர் உண்மையிலேயே சட்டக் கல்வி பயின்றவர்தானா என்னும் சந்தேகம் எழுகிறது[இன்னும் பல சந்தேகங்களும் உள்ளன. நீதிமன்ற விவகாரம் என்பதால் அவை தவிர்க்கப்படுகின்றன].
ஆக, குற்றவாளிகளுக்குத் துணைபோனதால் இவரும் குற்றவாளிதான்.
பல்வேறு வகையிலான குற்றங்கள் புரிவோரைத் தண்டிக்கச் சட்டத்தில் இடமுள்ளது. இவரைப் போன்றவர்களைத் தண்டிக்கச் சட்டத்தில் விதி ஏதும் இல்லையா?
இது குறித்துச் சிந்தித்துச் செயல்படுவது இவருக்கும் மேலான அதிகாரம் படைத்த[உச்ச நீதிமன்றம்] நீதிபதிகளின் கடமை ஆகும்.
* * * * *