புதன், 26 மார்ச், 2025

ஆதிக்க வெறியரிடம் மீண்டும் அடிபணிந்த 'அதிமுக' அடிவருடிகள்!!!

உலக அளவில், பல்வேறு இனங்களுக்கிடையேயான போர்களில்,  அனைத்து இனங்களுமே வெற்றியுடன் தோல்விகளையும் சந்தித்துள்ளன[இது இயல்பான ஒன்று] என்பது வரலாறு.

இதற்குத் தமிழினமும் விதிவிலக்கல்ல.

இரண்டாயிரம் ஆண்டுக்காலத் தமிழர்களின் வரலாற்றை ஆராய்ந்தால், பிற இனத்தவருடன் போரிட்டு வென்றிருக்கிறார்கள்; தோற்றதும் உண்டு.

தோல்விக்கான காரணங்கள் பல. 

அவற்றுள் குறிப்பிடத்தக்கது, தமிழினத் துரோகிகள் நம் இனத்தை மாற்றாரிடம் காட்டிக்கொடுத்தது.

துரோகத்திற்கு எட்டப்பனை எடுத்துக்காட்டாக்குவது வழக்கத்தில் உள்ளது.

எட்டப்பனைப் போலவே சிலர் நம் இனத்தில் இருந்திருக்கக்கூடும் என்பதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை.

எனினும், காட்டிக்கொடுக்கும் துரோகிகளின் எண்ணிக்கை சிறிதளவே என்பதால் அது நம்மைப் பெருமளவில் கவலைக்குள்ளாக்குவதில்லை.

ஆனால் இன்றோ.....

அந்த அவர்களின் எண்ணிக்கை மிக மிக மிகப் பலவாக அதிகரித்திருப்பது நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது; பெரிதும் வேதனைப்பட வைத்திருக்கிறது.

அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.....

‘அதிமுக’ என்னும் பெயரில் இயங்கும் மிகப் பெரிய கூட்டத்தார். இவர்கள் தமிழர் என்னும் பெயரில் பாஜக சங்கிகளிடம் ஏற்கனவே விலைபோனவர்கள்[தம்மிடமுள்ள கோடிகளைக் காப்பாற்றவும், அவர்களிடமிருந்து கோடிகளைப் பெறவும்]; இப்போதும் விலை பேசப்பட்டிருக்கிறார்கள்[https://www.bbc.com/tamil/articles/cwyjrdv7rjmo].

இவர்களைத் தவிர, தங்களைத் தமிழர்கள் என்று சொல்லவதற்கே வெட்கப்படுகிற ஒரு கூட்டமும் இங்கு உள்ளது. அது தமிழ்நாடு ‘பாஜக’ கட்சி. அதில் குறிப்பைடத்தக்கவர்கள்:

ஆட்டுக்கார அண்ணாமலை, எச்சி ராஜா, தமிழிசை, வானதி சீனிவாசன் போன்றவர்கள்.

தமிழக வரலாற்றிலேயே, மிக ஆபத்தானவர்களும், அளப்பரிய அதிகாரம் படைத்தவர்களும், பண பலம் பெற்றவர்களும், ஆதிக்க வெறி கொண்டவர்களுமான எதிரிகளுடன் தமிழர்கள் போராடுவது... போராடிக்கொண்டிருப்பது இப்போதுதான்.

தமிழின உணர்வாளர்கள் அதீத விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நெருக்கடியான காலக்கட்டம் இதுவாகும்.