அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 29 செப்டம்பர், 2022

'இது'க்கு இதுதான் தண்டனையா?!


#கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு நடுவூர்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் ஞானதாஸ். இவரது மனைவி லில்லி ஜெனட்.

இவர் கடந்த 14ஆம் தேதி மண்டைக்காடு காவல் நிலையத்தில் இவரது பக்கத்து வீட்டுக்காரர் சில நபர்களுடன் சேர்ந்து அரசின் உரிய அனுமதியின்றிக் கோயில் ஒன்றைக் கட்ட முயற்சிப்பதாகப் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இந்த நிலையில் அந்தப் புகார் சம்பந்தமாக விசாரணை நடத்த மண்டைக்காடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் முரளிதரன்  கடந்த 24ஆம் தேதி ஞானதாஸ் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அவர் வீட்டில் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில்  போலீஸ்காரர் வீட்டிற்கு வந்துள்ளதாக 'லில்லி ஜெனட்' தனது கணவருக்கு செல்போன் மூலம் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த[?!?!?!] உதவி ஆய்வாளர் முரளிதரன் அந்தப் பெண்ணை அடிக்க முற்பட்டதோடு அவரது செல்போனையும் பறிக்க முயன்றுள்ளார். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது#

இது செய்தி. https://tamil.news18.com/news/kanniyakumari/assistant-inspector-assaulted-woman-at-the-place-of-investigation-in-kanyakumari-cctv-video-809231.html

                                      *   *   *   *   *

போலீஸ்காரர் 'லில்லி ஜெனட்'டை நெஞ்சுப் பகுதியில் தொட்டுத் தள்ள, அந்தப் பெண் பின்னோக்கி நகர, அவரை இவர் பின்தொடர்வதான நிகழ்வு காணொலியில் இடம்பெற்றுள்ளது.

போலீஸ்காரர் கோபப்பட்டுத் தாக்கும் அளவுக்கு அங்கே என்ன நடந்தது என்பது பற்றிய விவரம் 'new 18' செய்தித் தொகுப்பில் இடம்பெறவில்லை.

நிகழ்வுக்குக் காரணம் ஒரு பொதுப் பிரச்சினை என்று தெரிகிறது.

போலீசை இழிவுபடுத்தும் அளவுக்கு 'லில்லி ஜெனட்' குற்றம் புரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

இந்நிலையில், இன்று காலை 09.00 மணியளவில், இதே செய்தியை, 'பாலிமர்' தொலைக்காட்சியில் காண நேர்ந்தது. இதன் தொடர்ச்சியாக.....

'கன்னியாகுமரி காவல்துறைக் கண்காணிப்பாளர், மேற்கண்ட போலீஸ்காரரைத் தண்டிக்கும் விதமாக, 'இடமாற்றம்'[Transfer] செய்துள்ளார்' என்னும் தகவல் அறிவிக்கப்பட்டதை அறிய முடிந்தது.

இதன் மூலம் போலீஸ்காரர் குற்றம் இழைத்துள்ளார் என்பது உறுதியாகிறது.

இங்கு நாம் எழுப்பும் வினா ஒன்றே ஒன்றுதான். அது.....

ஓர் இளம் பெண்ணைத் தொட்டுத் தள்ளியவருக்குத் தரப்படும் தண்டனை 'வெறும்' இடமாற்றம்தானா?

காவல்துறையில், இம்மாதிரிக் குற்றம் செய்வோருக்கு வெறும் இடமாற்றம் மட்டுமே தண்டனையாக வழங்கப்படும் செய்தி அவ்வப்போது ஊடகங்களில் வெளியாகிறது.

இடமாற்றம் என்பது எவ்வகையிலும் ஒரு தண்டனை ஆகாது. இன்னும் சொல்லப்போனால், இடம்மாறிச் செல்லும் ஊர் முன்னைவிடவும் அதிக 'வரும்படி' கிடைப்பதற்கான வாய்ப்பாகவும் அமையக்கூடும். புகார் கொடுக்கக்கூடத் தெரியாத, அல்லது, தயங்குகிற அப்பாவி மக்கள் வாழ்கிற ஊராகவும் அது அமைந்திட வாய்ப்புள்ளது.

காவல்துறையில் குற்றம் புரிவோருக்கு வழங்கப்படும் 'இடமாற்றம்' என்னும் தண்டனை தண்டனையே அல்ல என்பதை இந்நாள்வரை காவல்துறை உயர் அதிகாரிகளோ, ஆட்சியாளர்களோ உணராமலிருப்பது ஏன் என்று புரியவில்லை.

தொடர்புடைய காணொலி அடுத்து இடம்பெறும் கேட்ஜெட்டில்: