வியாழன், 20 பிப்ரவரி, 2025

‘கும்பமேளா’... குமரிகளைப் படம் எடுத்து விற்கும் ‘காலி’களுக்கான விழா!!!

புனிதமானவை என்று சொல்லப்படும் கங்கை&யமுனை ஆறுகளில் னிதக் கழிவுகளிலிருந்தும், அழுகிய/அரைகுறையாய் எரித்து வீசப்பட்டப் பிணங்களிலிருந்தும் வெளியேறும் நோய்க் கிருமிகள் கலந்திருப்பதால், கொடிய நோய்கள் பரவும் பேராபத்து இருப்பதாக ஒன்றிய அரசுச் சார்புள்ள ‘மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்’ செய்தி வெளியிட்டிருப்பதை உறுதிப்படுத்துகின்றன கீழ்க்காணும் 3 காணொலிகள்.

ஆளுவோருக்கு இது குறித்தெல்லாம் கவலையில்லை; 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுவதாக அவர்கள் சொல்லும்[பொய்> 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது இது] இந்த ‘மஹாகும்பமேளா’ மூலம் மூடர்களின் எண்ணிக்கையை அதிகரித்துப் பலன் பெறுவது மட்டுமே அவர்கள் நோக்கம்.

கும்பமேளா என்னும் கூத்தடிப்பு முடிவதற்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் அவர்கள் தாங்கள் நினைத்ததைச் சாதித்துவிட்டார்கள் என்றே சொல்லலாம்.

இந்தக் கொண்டாட்டம் மூடநம்பிக்கையை வளர்ப்பதற்காகவும், நோய்களைப் பரப்புவதற்காக மட்டுமல்ல, சமூக விரோதிகள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதற்கும் வழிவகுத்துள்ளது என்பதை முதலாவதாக இடம்பெற்றுள்ள காணொலிச் செய்தி உறுதிப்படுத்துகிறது.

கும்பமேளாவால்[ஆட்சியாளர்களால்?] இந்த நாட்டுக்கு விளையும் பெரும் கேடுகளை விரிவாகப் பேசுகின்றன மூன்று காணொலிகளுமே. 

காணொலிகள்[03]: