எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வியாழன், 20 பிப்ரவரி, 2025

எச்சரிக்கை! கும்பமேளா ஆற்றில் யோகியும் மோடியும் நீராடலாம்! மற்றவர்கள்.....

ன்று சட்டமன்றத்தில் பேசிய ‘உ.பி.’ மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "கும்பமேளாவில் பக்தர்கள் புனித நீராடும் நீர் தூய்மையாகவே உள்ளது; பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு மட்டுமல்ல ஏன் குடிக்கவும் உகந்ததுதான்” எனத் தெரிவித்துள்ளார்[https://tamil.news18.com] என்பது செய்தி.

இந்தச் செய்தியில் ஒரு சிறு திருத்தம்.....

யோகி ஆதித்யநாத் ஒரு யோகி; ஆன்மிகப் பேரொளி; புலன்களை அடக்கி ஆளும் துறவி; இறை நேசர்; இறைவனால் நேசிக்கப்படுபவர். எனவே, பிரயாக்ராஜ் ஆற்று நீரில் இவர் குளிக்கலாம்; அதைக் குடிக்கவும் செய்யலாம். ஆற்று நீரில் உள்ள எந்தவொரு நோய்க் கிருமியும் இவரை நெருங்காது.

மோடி இந்த மண்ணுலக மக்களை உய்விக்கக் கடவுளால் அனுப்பப்பட்டவர்; உலகம் கண்டிராத உன்னதமான பக்திமான்; கடவுளின் ஓர் அம்சம். ஆகவே, இவரும் மனித மலம் கலந்ததும் அழுகிய பிணங்கள் மிதப்பதுமான பிரயாக்ராஜ் ஆற்று நீரில் குளிக்கலாம்; அதை எத்தனை முறையும் அருந்தலாம். இவரைக் கண்டு கிருமிகள் அஞ்சி அலறி விலகி ஓடும்.

இவர்கள் இருவரையும் தவிர்த்து வேறு எவரும்[அமித்ஷா உட்பட> புனிதர் அல்ல என்பதால்] மேற்கண்ட ஆற்று நீரில் குளிப்பது தவறு என்பதைப் பல்வேறு பாவங்களைச் சுமந்து திரியும் அப்பாவி மக்களுக்கும் பக்தர்களுக்கும் பணிவுடனும் கனிவுடனும் தெரிவிக்கிறோம்!

* * * * *

https://tamil.news18.com/national/prayagraj-ganga-water-pollution-yogi-adityanath-denies-nw-azt-ws-b-1732865.html#goog_rewarded