வியாழன், 20 பிப்ரவரி, 2025

போப் பிரான்சிஸ்[ஆண்டவர்] கவலைக்கிடம்! இறுதி ஊர்வல ஒத்திகை தேவையா?

#போப் பிரான்சிஸ்[போப் ஆண்டவர்] பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால், சிக்கல்களின் அபாயத்தில் உள்ளார். அவர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்திவருவதால், உடல் ரீதியாகச் சுறுசுறுப்பாக இல்லை.

அவர் தனது இறுதிக் கட்டத்தை நெருங்கி வருவதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவித்துள்ளன. எனவே, போப் ஆண்டவரின் இறுதி ஊர்வலத்திற்கான ஒத்திகைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன#https://ibctamilnadu.com/

கிறித்தவ மதத்தவரின் மரணத்திற்குப் பின்னரான சடங்குகள் குறித்து நமக்கு ஏதும் தெரியாது எனினும், போப் ஆண்டவர் உயிரோடு இருக்கும் நிலையில் அவரின் இறுதி ஊர்வலத்திற்கான ஒத்திகை நடைபெறுவதாக நாம் அறிந்த செய்தி நம்மைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.

போப் பிரான்சிஸ் ஆகட்டும் நம்மைப் போன்ற சாமானியராகட்டும், ஒருவர் உயிருடன் இருக்கும்போதே, இறந்த பிறகு நடத்தப்படும் இறுதி ஊர்வலத்துக்கு ஒத்திகை பார்ப்பது ஒரு கொடூரமான வழக்கம் என்றே தோன்றுகிறது.

ஒத்திகை பார்க்காமல் நடத்தப்படும் இறுதி ஊர்வலத்தில் தவறு நேருமாயின் அது வருத்தம் தரும் நிகழ்வு அல்ல; ஒரு குற்றச் செயலும் அல்ல.

கர்த்தரின் அருளால்[மருத்துவர்களின் கணிப்பு பொய்த்துப்போகலாம்] இன்னும் சில காலம் போப் அவர்கள் உயிர் வாழ்வாரேயானால் ஊர்வல ஒத்திகை அர்த்தமற்றதாக ஆகிறதே; நல்ல மனங்களை உறுத்துவதாகவும் ஆகுமே.

அறிவுஜீவிகள் நிறைந்த கிறிஸ்தவ மதத்தவரிடம் இப்படியொரு வழக்கமா?

போப் ஆண்டவர் அவர்களுக்காகப் பெரிதும் வருந்துகிறது நம் மனம்.

* * * * *

https://ibctamilnadu.com/article/pope-francis-funeral-preparation-bigins-1740044550#google_vignette