வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

‘தனித் தமிழ்நாடு’ பிரிவினைக் கோரிக்கை தலைதூக்குமா?!

“இந்தி பேசும் மாநிலத்தவர் எவரும் இந்தியைத் தவிர வேறு மொழியைக் கற்பதில்லை” என்பது முன்னாள் ஒன்றிய நிதியமச்சர் ப. சிதம்பரம் அவர்களின் கூற்று[[ஊடகச் செய்தி].

அறிவியல்&தொழில்நுட்பக் கல்வியில் ஈடுபாடோ,  வேறு இந்திய மொழியைக் கற்கும் திறனோ இல்லாதவர்கள் ‘இந்தி’யர்கள். இந்தியைத் தவிர வேறு மொழி தேவையில்லை என்னும் திமிரும் அவர்களுக்கு உண்டு.

இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்குவதன் மூலம் இந்த நாட்டைத் தாங்களே ஆளுவதும், பெருமளவில் வேலை வாய்ப்புகளைப் பெறுவதும் அவர்களின் கொள்கை. அதை நிறைவேற்றவே வெறித்தனமாகச் செயல்படுகிறார்கள்[இப்போதே ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அஞ்சலகம், ரயில் போக்குவரத்து, காப்பீட்டு நிறுவனம், பாதுகாப்புத் துறை போன்றவற்றில் இந்தி மொழி ஆதிக்கம் செலுத்துகிறது. அதை மாற்றியமைக்கவே பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது].

வெறியர்களின் செயலுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஆளும் ‘பாஜக’ வினரின் நடவடிக்கைகள் உள்ளன; தேவைக்கும் அதிகமான அதிகாரமும் உள்ளது.

இந்த அதிகாரப் பலம் அளிக்கும் திமிரில்தான், இந்தியை[மும்மொழித் திட்டம் என்பதெல்லாம் முழுப் பித்தலாட்டம்] ஏற்காவிட்டால் நிதியுதவி நிறுத்தப்படும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சன்ர் பேசுகிறான்ர்

இம்மாதிரி மிரட்டல்கள்  இனியும் தொடரும்; நிதியுதவிகளை நிறுத்துவது போன்ற அட்டூழியங்களும் நிகழ்வது உறுதி.

இவர்களின் அடாத செயல்களை எதிர்த்துத் தமிழர்கள் தனியாக[‘இந்தி’யரல்லாத இனத்தவர் இணைந்து செயல்படுவது இப்போதைக்குச் சாத்தியம் அல்ல. அண்ணாமலை, ‘எச்சி’ராஜா போன்ற கொத்தடிமைகளின் காட்டிகொடுக்கும் துரோகச் செயல் போராட்டத்தைப் பலவீனப்படுத்தும்]ப் போராடி வெற்றி பெறுவது எளிதல்ல.

ஆக,

தமிழரின் தாய்மொழியாம் தமிழுக்கும் அவர்தம் இனத்துக்கும் பெரும் கேடு விளையவிருக்கும் ஆபத்தான சூழல் இன்று நிலவுகிறது.

தமிழினத்துத் தலைவர்கள், தம்மிடையே உள்ள சிறு சிறு கருத்துமாறுபாடுகளைப் புறம் தள்ளி, ஒருங்கிணைந்து சிந்தித்து, போராட்டத்துக்கான வழிமுறைகளை ஆராய்வது மிக அவசியம்.

செய்வார்களா?