புதன், 4 செப்டம்பர், 2024

கடனாளி ஏழுமலையானுக்கு வாரி வழங்குங்கள்! வைகுண்டப் பதவி பெறுங்கள்!!

‘நான் பெற்ற கடனைக் கலியுகத்தில் எனது பக்தர்கள் அடைப்பார்கள்’ என்னும் இந்த வாசகம், திருவேங்கடவன்[ஏழுமலையான்] குபேரனுக்கு[இவன்தான் கடவுள்களுக்கெல்லாம் கடன் கொடுப்பவன்!] எழுதிக் கொடுத்த கடன் பத்திரத்தில்[பட்டயம்] உள்ளதாம்.

வேங்கடவனின் வேண்டுகோளை ஏற்று, பக்தர்கள் அவனுக்கு அள்ளி அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்களாம்.

இந்துமதம் உதயமானதே புராணக் கதைகளிலிருந்துதான். புனிதமானவை என்று நம்பப்படும் புராணங்களில் ஒன்று பவிஷ்யோத்ர புராணம்’. அதில்தான் ஏழுமலையான் என்னும் திருவேங்கடவன் கடன்காரன் ஆன கதை இடம்பெற்றுள்ளது.

எனவே, இது கதை அல்ல, உண்மை நிகழ்வு என்று மனப்பூர்வமாய் நீங்கள் நம்பலாம்[ஹி...ஹி... ஹி!!!].

நம்பி.....

நீங்களும் கட்டுக்கட்டாய்ப் பணம், கொத்துக்கொத்தாய் நகைகள், டன் டன்னாக தங்கக் கட்டிகள் என்று உங்களால் இயன்ற காணிக்கைகளையெல்லாம் திருப்பதி உண்டியலில் போடுங்கள்.

பக்தக்கோடிகளான உங்களை நம்பித்தான் திருவேங்கடத்தான் குபேரனிடம் கணக்கு வழக்கில்லாமல் கடன் வாங்கியிருக்கிறான்.

கடனை அடைக்க உதவுகிற உங்களுக்கு நீங்கள் செத்த பிறகு வைகுண்டப் பதவி கிட்டும் என்பது 100% உறுதி!

பழம்பெரும் புராணக் கதைக்குப் புத்துயிர் ஊட்டி, அதை வாசிக்கும் அத்தனைப் பேரும் வைகுண்டப் பதவி பெற்றிட வழிவகுத்த ‘விகடன்’ ஆசிரியருக்கும் அங்கே ஓரிடம் உண்டு என்பது நிச்சயம்!!

* * * * *

https://www.vikatan.com/spiritual/tirumala-tirupati-devasthanams-lord-balaji-worship?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjCejf8KMN389wIw15ieAw&utm_content=rundown&gaa_at=g&gaa_n=AWsEHT4EHRjdAdgitKPairpsGbzW7mS97M_vFwIh1Gbcw0AM3FwjqIy2hFuJR6I7pFPI7xa-V53z5CQpa_DavEe0ScVKX9EU86-oIWU%3D&gaa_ts=66d837fb&gaa_sig=05b0Fzv6AsaMlTcqkz8bBxEkOVJR_TJdBIn5HpFWzqkE-MAOa1Ip2cVoXTLhCrK2INwvH8xYt-y_E8PiqdXv1A%3D%3D Yesterday at 12 AM