கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர், தாம் தீர்ப்பு வழங்கிய ஒரு வன்புணர்வு வழக்கில்[16 வயதுப் பெண்ணின் சம்மதத்துடன் ஆண் உடலுறவு கொண்டது], “இளம் பெண்கள் தங்களின் பாலியல் இச்சைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இரண்டு நிமிடச் சுகத்துக்காகத் தங்களை இழந்து அவமானப்படுதல் கூடாது” என்று அறிவுரை வழங்கியிருக்கிறார்.
அறிவுரையில், ‘இரண்டு நிமிட உடலுறவுச் சுகம்’ நம் கவனத்தை ஈர்த்தது.
‘வெறும்’ இரண்டு நிமிடங்களில் உடலுறவு அனுபவம் முடிந்துவிடுவதைத்தான் ‘இரண்டு நிமிடச் சுகம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் நீதியரசர் அவர்கள்.
ஆணும் பெண்ணும் இணைந்து[குறிப்பாகப் பதின்பருவத்தில், சாதனங்கள் ஏதும் பயன்படுத்தாமல்] அந்தரங்கச் சுகத்தைப் பெறும் கால அளவை மிகச் சரியாகவே கணித்துச் சொல்லியிருக்கிறார் எனலாம்[அரை அல்லது கால் அல்லது அரைக்கால் நிமிடத்திலேயே முடிந்துவிடுவதும் உண்டு].
நீதிபதி அவர்கள், ‘பெண்கள்’இன் முன்னால் ‘இளம்’ சேர்த்திருப்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
இளம் பருவத்தைக் கடந்தவர்களும் ‘அது’ விசயத்தில் அனுபவம் பெற்றவர்களுமான பெண்களால், அவர் குறிப்பிடுவது போல இச்சைகளைக் கட்டுப்படுத்துவது சாத்தியமாகலாம். ஆனால்.....
‘அந்த’ச் சுகானுபவத்தை அனுபவித்திராத இளசுகளால்[பெற்றோர் மிக அதிகக் கவனம் செலுத்த வேண்டிய பருவம்] அதைக் கட்டுப்படுத்துவது எளிதான செயல் அல்ல.
‘அல்வா[ஏதோ ஒரு இனிப்பு]’வின் ருசியை ஏற்கனவே சில முறையோ பல முறையோ சுவைத்தறிந்த ஒருத்தியால் அதன் மீதான ஆசையைக் கட்டுப்படுத்த முடியும்[விதிவிலக்கானவர்களும் உளர்]; அந்த அனுபவமே[உடலுறவிலும்தான்] இல்லாத சிறுசுகளிடம், ஆசை தீர அதை உண்ண வேண்டும் என்பதைவிடவும், ஒரே ஒரு முறையேனும் ருசித்துப்பார்க்க வேண்டும்[அ.சுகத்தை அனுபவிக்க வேண்டும்] என்னும் ஆர்வமே மேலோங்கியிருக்கும்.[இதனால் விளையும் தீங்குகளைச் சுட்டிக்காட்டி இவர்களின் மனதைப் பக்குவப்படுத்தும் பெரும் பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது].
ஆக, நீதியரசர் அவர்களிடம் நாம் சொல்லிக்கொள்ள விரும்புவது.....
“ஐயன்மீர், இளம் பெண்களுக்கு அறிவுரை வழங்கிய தாங்கள், அவர்களின் பெற்றோர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்கியிருந்தால் அது பெரிதும் விரும்பத்தக்கதாக அமைந்திருக்கும் என்பதே.
[மேற்கண்ட வயதுப் பெண்ணை அவள் சம்மதத்துடன் ஆண் திருமணம் செய்தாலும் அதைப் பொருட்படுத்தத் தேவையில்லையா?]