உலகின் மிகவும் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி இரண்டு லட்சம் நட்சத்திரக் குழுமங்களைக் கண்காணித்த அறிவியல்[வானிலை] ஆய்வாளர்கள், கடந்த இரண்டு பில்லியன் ஆண்டுகளில் பிரபஞ்சம் வெளியிடும் சக்தி அரைவாசியாக குறைந்துள்ளது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
‘புதிய நட்சத்திரங்கள் பிறக்கும் வேகமும் குறைந்துவருகிறது’ என்னும் பழைய ஆய்வின் முடிவை அவர்கள் உறுதி செய்துள்ளனர்.
14 பில்லியன் ஆண்டுகள் பழமையான பிரபஞ்சத்தின் விதி முடிய காலம் இருக்கிறது என்றாலும், அந்தக் கால வரம்பு நிரந்தரமற்றது[எப்போது வேண்டுமானாலும் பிரபஞ்சம் அழியலாம்] என்றும் அவர்கள் கூறியுள்ளனர். -https://www.bbc.com/tamil/science/2015/08/150811_universe
ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் அதில் உள்ளடங்கிய பூமியும் அழிந்துபோகும் நிலையில் மனித இனம் பூண்டோடு அழியும் என்பதில் கிஞ்சித்தும் ஐயத்திற்கு இடமில்லை.
அது நிகழ்ந்தாலும், மனித இனமும் பிற உயிரினமும் வாழ்வதற்கு உகந்த ஒரு பூமியோ அதைப் போன்ற பிறிதொரு கோளோ புதிய பிரபஞ்சத்தில் உருவாகும் என்று சொல்வதற்கில்லை.
ஆகவே,
‘மனித இனம் உள்ளவரை, மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தத்தமக்குரிய குறுகிய வாழ்நாளைத் தமக்கும் பிறருக்கும் பயன் தருவதாய் வாழ்ந்து முடிப்பதே அறிவுடைமை ஆகும்.
அத்தகையதொரு வாழ்வுக்கு ஆறறிவை முழுமையாகப் பயன்படுத்துவது அவசியம்.
அதைத் தவிர்த்து, ஞானி சொன்னார், மகான் சொன்னார், அவதாரம் சொன்னார், அவர் சொன்னார், இவர் சொன்னார்[அண்டசராசரமே இருந்த இடம் தெரியாமல் வெடித்துச் சிதறிக் காணாமல்போகும் நிலையில் அவதாரமும் இல்லை; மகானும் இல்லை; புனிதரும் இல்லை; ஒரு புடலங்காயும் இல்லை] என்று கடவுளை நம்பி, மூடநம்பிக்கைகளை வளர்த்து முட்டாள்காக வாழ்வது வருந்துதற்குரியது! கண்டிக்கத்தக்கது!!