"சிஓபி[COB>ஒரு வட்டமான நிறை, கட்டி அல்லது குவியல்] முற்றிலும் விண்மீன் திரள்களால் ஏற்படுகிறது" என்று லாயர்[விஞ்ஞானி] கூறினார். "விண்மீன் திரள்களுக்கு வெளியே பார்த்தால், அங்கே இருளைக் காண்கிறோம், அதற்கு மேல் எதுவும் இல்லை."["The simplest interpretation is that the COB is completely due to galaxies," Lauer said. "Looking outside the galaxies, we find darkness there and nothing more."Scientists confirm that most of the universe is 'darkness and nothing more' (msn.com)]
அறிவியலாளரே,
விண்மீன் திரள்களிலா, அவற்றிற்கு வெளியே பரவிக்கிடக்கும் இருளிலா, இருளுக்கு அப்பால் வெற்றிடம் இருந்தால், அந்த வெற்றிடத்திலா கடவுள் எங்கே இருக்கிறார் என்பதை அதி விரைவில் கண்டுபிடித்துச் சொல்லுங்கய்யா.
இவர்களால் மக்கள் பக்திப் பித்தர்களாகிக் கோயில் கோயிலாக அலையும் பரிதாபத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
ஆகவே.....
மேற்கண்ட இடங்களில் கடவுள் எங்கேனும் ஒளிந்துகொண்டிருக்கிறாரா, அல்லது அப்படியான ஒரு நபர் எங்கேயும் இல்லையா என்பதை விரைவில் கண்டறிந்து அறிவியுங்கள் அய்யா!