ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

‘அமித்ஷா’... உள்துறை அமைச்சரா, உலக மகாப் பொய்யரா?!?!

கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு மொழியின் உள்ளடக்கத்தைப் பிறிதொரு மொழிக்கு மாற்றியமைக்கும் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில், இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 22[?] மொழிகளையும் இந்த நாட்டின் அலுவல் மொழிகளாக மாற்றுவதைத் தவிர்த்து, இந்தியை மட்டுமே கோலோச்சும் மொழியாக்கி அரசியல் நடத்துகிறார்கள் ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் பெரும்பான்மை இந்தி வெறியர்கள்.

இந்நிலையே நீடிக்க வேண்டும் என்பதற்காக ‘ஆண்டுதோறும் ‘இந்தி தினம்’ கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டின் கொண்டாட்டத்தில், முன்னணி இந்தி வெறியனான அமித்ஷா ஆற்றிய[தூற்றிய பொய்யுரைகள்] உரை ஊடகங்களில் வெளியாகியுள்ளது[கீழ்க்காண்பவை உட்பட].

வாசியுங்கள்.


‘இந்திக் கலாச்சார அடிப்படையில் நாடு முழுதும் பரவியுள்ள மொழி இந்தி’ என்று பேசியிருக்கிறார் மோடியின் வலக்கரமான இந்த உ.து.[தூ...!]அமைச்சர்.

இந்த நாடு பல்வேறு கலாச்சரங்களைக் கொண்டது. இவர் சொல்வது இந்திக்காரன் கலாச்சாரத்தை.

இந்திக்காரன்களின் கலாச்சாரம்தான் இந்தியாவின் கலாச்சாரம் என்கிறார் இந்திக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் அமித்ஷா.

இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளும் இந்தியின் வாயிலாக வளர்ச்சி அடைய வேண்டுமாம்.

அடடா, என்ன உன்னதமான இலட்சியம்! இந்தியை வளர்க்கக் கோடானுகோடி ரூபாய் செலவழித்த/செலவழிக்கும் இந்த இந்தி வெறிக் கூட்டம், தமிழ் முதலான பிற மொழிகளின் வளர்ச்சிக்கு எவ்வளவு செலவிட்டிருக்கிறது?

எத்தனைப் பேர் காதுகளில் பூச்சுற்றுகிறார்கள்!

தேசியக் கல்விக் கொள்கை மூலம் தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கிறார்களாம். உண்மைதான், இந்தி வழிக் கல்விக்கு அளவிறந்த சலுகைகளை அளித்து, இந்திய மக்கள் அனைவரையும் இந்தியைத் தங்கள் தாய்மொழியாக ஏற்கச் செய்வது இவர்களின் திட்டம்.

அடேங்கப்பா, எப்படியெல்லாம் சூதுவாது செய்து இந்தி வளர்க்கிறார்கள்!

அமித்ஷா என்னும் இந்த நபரின் பேச்சு, இந்திக்காரர்களைத் தவிர பிற மொழிக்காரர்களை எல்லாம் அடிமுட்டாள்களாக அவர் நினைப்பதன் பிரதிபலிப்பாகும்.

இந்திக்காரன்களையும் மூடநம்பிக்கையாளரையும் கவர்ந்து ஆட்சியைக் கைப்பற்றி, தங்களின் விருப்பம் போல கொட்டமடிக்கிறது இவருடன் இணைந்து செயல்படும் ஒரு கூட்டம்.

இனியேனும், இந்தி அல்லாத பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் விழிப்புணர்வு பெற்று மிகப் பெரும் போராட்டம் நடத்தினாலொழிய, இங்குள்ள அனைத்து மொழிகளையும் விழுங்கி இந்தி அசுர வளர்ச்சி பெறும்[இப்போதே தேவைக்கு மேல் பெற்றிருக்கிறது] என்றும், இந்தியா 100% ‘இந்தி’யா ஆகும் என்றும் ‘இந்தி’யர் அல்லாதோரை மிகக் கடுமையாக எச்சரிக்கிறோம்!