திங்கள், 16 செப்டம்பர், 2024

மனிதர்களுக்கு ஆறறிவு! மற்ற உயிர்களுக்கு ஐந்தறிவு[அதிகபட்சம்]!! கடவுளுக்கு?!

10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் கடவுள் மனிதர்களைப் படைத்தார் என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள். 

படைத்ததோடு அமையாமல், இவர்களுக்குச் சிந்திக்கும் அறிவையும்[ஆறறிவு] அருளியிருக்கிறார்.

அதன் விளைவு, இவருக்குக் கோயில் கட்டி, விழாக்கள் எடுத்துக் கும்மாளம் அடித்து வழிபட்டால் துன்பங்கள் அகன்று இன்பமாக வாழலாம் என்று நம்புகிறார்கள் இவர்கள்[மிகப் பெரும்பாலோர்].

ஆனால்.....

10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் தன்னால் படைக்கப்பட்ட மனிதர்களுக்கு ஆறறிவைக் கொடுத்த கடவுள், 100 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தன்னால் உருவாக்கப்பட்ட பிற உயிரினங்களுக்கு[எண்ணிக்கையில் மனிதர்களைக் காட்டிலும் மிகப் பல மடங்கு அதிகம்] அந்த ஆறறிவை வழங்கவில்லை.

அவற்றிற்கு வழங்கியிருப்பது ஐந்தறிவு[ஒன்று முதல் ஐந்து] மட்டுமே.

ஆறறிவு வழங்கியிருந்தால், அவைகளும் அவரை வழிபட்டு மனிதர்களைப் போலவே[சுகபோகமாக?] வாழ்வது சாத்தியம் ஆகியிருக்கும்.

கருணைவடிவானவனும் அனைத்திற்கும் மேலான அறிவு படைத்தவனுமான அவர்ன்[கடவுள்] அதைச் செய்யவில்லை.

தான் படைத்த உயிர்களுக்கிடையே பெரிதும் பாரபட்சம் காட்டிய ‘அவன்’ கருணை வடிவானவன் அல்ல; மேலான பேரறிவாளனும் அல்ல. எனவே, அவனை ‘அறிவிலி’ என்று சொல்லலாம் அவனின் இருப்பு உண்மையானால்!