ஆன்மிகச் செம்மல்களின் அனுமானங்களின்படி.....
ஆண்டவர் அணுவில் இருக்கிறார்; தூசுதுரும்புகளிலும் இருக்கிறார்.
சிலைகள் வடிப்பதற்கான கல்லிலும், களி மண்ணிலும், வார்த்தெடுப்பதற்கான உலோகங்களிலும் இருக்கிறார்.
வழிபடு கடவுள் எதுவோ அதை மேற்கண்டவற்றில் ஒன்றிலோ அனைத்திலுமே வடிவமைத்து விரும்பும் இடங்களில் நிறுவலாம். வழிபடலாம்.
வழிபடுவது சிலைதான் என்றாலும் சிலைக்குள்ளும் கடவுள் இருக்கிறார் என்பது உண்மை[நம்பிக்கை]. ஏனென்றால்.....
தன்னால் படைக்கப்பட்ட அனைத்துப் பொருள்களிலும் உயிர்களிலும் இரண்டறக் கலந்திருக்கிறார் அவர் என்பதால்.
அப்புறம் எதற்குப் புதிதாக நிறுவப்படும் கோயில் சிலைகளில் அவரைக் குடியமர்த்த வேதமந்திரம் ஓதுகிறார்கள் விற்பன்னர்கள்?
சக்தி வடிவமான கடவுளுக்கே, செத்தால் புழுத்து நாறி மண்ணோடு மண்ணாகும் இந்த அற்ப மனிதர்கள் ஓதுகிற மந்திரம் புதிய சக்தியை வழங்குகிறதா? புத்துணர்வு ஊட்டுகிறதா?
எதுக்குடா மந்திரம்? கடவுள் அசரீரியாகச் சொன்னார்; முன்னோர்கள் அதை வழிவழியாகப் பின்னவர்களுக்குக் கற்பிக்கிறார்கள் என்று ஏன் மனசாட்சியே இல்லாமல் பொய் சொல்லுகிறீர்கள்?
அறிவியல் யுகத்தில் வாழும் இந்நாள் மனிதர்களுக்கும் இல்லாமல்போனது அவர்களுக்கான நல்ல காலம்; இவர்களுக்கான கெட்ட காலம்!