திங்கள், 7 ஏப்ரல், 2025

இந்தக் குஜராத்திக்கு[மோடி] இத்தனை வாய்க்கொழுப்பா!?!?!

‘மோடி’ என்பவர் இந்த நாட்டின் பிரதமராக அறியப்படுகிறவர்.

இந்திய அரசாங்கச் சார்புள்ள எந்தவொரு நிகழ்வில் கலந்துகொள்ளும்போதும் இவர் ஒரு ‘இந்தியர்’ ஆகவே கருதப்படுவார்.

தன்னைப் பற்றி எதுவும் குறிப்பிட நேர்ந்தால் ‘நான் இந்தியன் என்றுரைப்பதே பின்பற்றத்தக்க நெறிமுறையாகும்.

மோடியோ பாம்பன் பாலத்தைத் திறந்துவைத்தபோது.....

"இந்தப் பாம்பன் பாலத்தை 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டியவர் ஒரு குஜராத்தி. தற்போது இதே பாம்பனில் இந்தப் புதிய பாலத்தைத் திறந்து வைப்பதும் அதே குஜராத்தில் பிறந்த குஜராத்தியான நான்" எனக் கூறி உள்ளார்[ஊடகச் செய்தி]


இது இவரின் குறுகிய மனப்பான்மையைக் காட்டுகிறது. இதை உணரும் குறைந்தபட்ச அறிவுகூட இவருக்கு இல்லாதது நம்மை வியக்கச் செய்கிறது.

இவர், “திமுக கூட்டணி வகித்த ஆட்சி காலங்களைவிடத் தற்போது 3 மடங்கு[வாய்ப்பே இல்லை] நிதியினை மத்திய அரசு தமிழ்நாட்டிற்குக் கொடுத்துள்ளது” என்று ஆதாரம் ஏதும் தராமல் கதையளந்திருக்கிறார்.

கொடுத்திருந்தாலும்கூட, “இவ்வளவு கொடுத்தும், போதவில்லை என அழுகிறார்கள்''  என்று பேசி தமிழ்நாடு முதல்வரை[ராமேஸ்வரம் விழாவில்] மோடி[இந்தியப் பிரதமர் அல்ல; ஒரு குஜராத்தி] மறைமுகமாகத் தாக்கிப் பேசியது[ஊடகச் செய்தி] அநாகரிகத்தின் உச்சம்; வடிகட்டிய அயோக்கியத்தனம்.

பக்தி என்னும் பெயரால் மூடத்தனத்தை வளர்த்து ஆட்சியைக் கைப்பற்றும் தந்திரத்தை மட்டுமே தெரிந்துவைத்திருக்கும் இந்தக் குஜராத்தி, பழம்பெரும் நாகரிகமும் பண்பாடும் அதீத அறிவு வளர்ச்சியும் பெற்ற தமிழனைவிட எந்த வகையில் உயர்ந்தவர்?

எந்த வகையிலும் இல்லை.

மேற்கண்ட இழிப்புரைக்கு[அழிவுக்கால உரையும்கூட], வர் இந்த நாட்டின் பிரதமர் என்னும் அகங்காரமே காரணம்!