இசையமைப்பில் சாதனைகள் நிகழ்த்தித் தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த இளையராஜா அவர்களே,
ஊடகத்திற்கு அளித்த ஒரு பேட்டி முழுதும் உங்களின் அளப்பரிய கடவுள் பக்தியை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.
இயற்கை அழகைக் கண்டு ரசிக்க இரு கண்களைக் கொடுத்தான்; நறுமணம் நுகர மூக்குகள் தந்தான்; இன்னிசை கேட்டு இன்புறக் காதுகளும், ருசியாகத் தின்று செரிக்க வாயும் கொடுத்தான் என்றெல்லாம் வெகுவாக மனம் நெகிழ்ந்து பேசியிருக்கிறீர்கள்.
இதன் மூலம், உறுப்புக் குறைபாடு உடையவர்களையும், அவை இருந்தும் அனுபவிக்கக் கொடுப்பினை இல்லாதவர்களையும் ஏன் படைத்தான் உங்கள் கடவுள் என்பதை நீங்கள் ஒருபோதும் சிந்தித்ததில்லை என்பதை அறிய முடிகிறது; இசையமைப்பதில் ‘இசை ஞானி’ என்று புகழ் பெற்றுவிட்ட நீங்கள் ஆன்மிகத்திலும் ‘ஞானி’ப் பட்டம் பெற்றிட ஆசைப்படுகிறீர்கள் என்பது புரிகிறது.
ஊடகப் பேட்டியாளருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே உங்களுக்குள் ‘Silance'[அமைதி?] நிலவுவதாக உளறியிருக்கிறீர்கள்.
வேலைவெட்டி இல்லாமல் கட்டியக் கோவணத்துடன் திருவண்ணாமலையில் சுற்றித்திரிந்த ரமணனைக்[மகரிஷி ஆக்கப்பட்டவர்] குரு என்கிறீர்கள்[ரமண மகரிஷிகள் உங்களைச் சீடனாக ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்பதை மறந்துவிட்டீர்கள்].
இரு கேள்விகளை[பலரும் கேட்ட/கேட்கும் மிகச் சாதாரணக் கேள்விகள்] நீங்கள் கேட்டதாகவும், கிடைத்த பதில்கள் உங்களின் கன்னங்களில் ஓங்கி ஓங்கி அறைந்தது போல் இருந்ததாகவும் சொல்லி ஆர்ப்பரித்திருக்கிறீர்கள்.
இவை போல, சொல்வதற்கு இன்னும் நிறையக் குறைகள் உள்ளன. ஆயினும், அவற்றைப் பட்டியலிடாமல் நாம் உங்களிடம் அறிவுறுத்த விரும்புவது.....
இசைத் துறையில் மாபெரும் சாதனை படைத்து உலகம் போற்றும் கலைஞன் ஆகிவிட்டீர்கள்.
இப்போதும், இனி எப்போதும் நீங்கள் ‘இசை ஞானி’தான்!
‘இசை ஞானி’யாகவே இருங்கள்; ஆன்மிகம் பேசி ‘இறை ஞானி’ ஆவதற்கோ, சூத்திரன்[ஆக்கப்பட்டீர்கள்> நீசப்பிறவி] ஆன நீங்கள் ‘பிராமணன்’ஆக[ரமணனைக் குருவாக ஏற்பதன் மூலம்] மதிக்கப்படுவதற்கோ ஆசைப்பட வேண்டாம் ராஜா!
இளையராஜாவின் காணொலிப் பேட்டி: