எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வியாழன், 3 ஜூன், 2021

'பிரபல' சாமியார் லீலை!... இன்றைய, சூடான 'பர...பர...பர...' காலைச் செய்தி!!!


சிவசங்கர் பாபா!

இவர்,  30 ஆண்டுகளுக்கும் மேலாக, "நான் கடவுளின் அவதாரம்" என்று கூறிக்கொண்டிருக்கும் ஒரு 'ஃபிராடு' சாமியார். கேளம்பாக்கத்தில், 'சுஷில்ஹரி' என்னும் பெயரில் பள்ளி[உணவு&உறைவிட வசதியுடன்] நடத்துபவர்.

இவர் குறித்து, சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகச் செய்தி வெளியாக்கிக்கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரி சரஸ்வதி ரங்கசாமி தலைமையிலான குழுவினர் பள்ளியில் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.[சம்பவத்தின்போது, 'கடவுளின் அவதாரம் அங்கு காணவில்லை' என்பது செய்தி].

இந்தச் சல்லாபச் சாமியாருக்கு  11ஆம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாம்.

5 முதல் 10ஆம் வகுப்புவரையிலான மாணவிகள் பலரிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக அங்கு படித்த மாணவிகள் குற்றம் சாட்டியிருப்பதாக காட்சி ஊடகம்[நன்றி: polimer news] ஒன்று இன்று காலையிலிருந்தே செய்தி வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.

இந்தத் தாடி வளர்க்காத மகான் விரித்த வலையில் சிக்காத ஒரு மாணவி, இந்தப் பரமாத்மா மாணவிகள் பலரிடம், தன்னைக் கடவுளின் அவதாரம் என்று சொல்லிச் சொல்லி மூளைச் சலவை செய்து பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டதைத் தான் பார்த்ததாகச் சொல்லியிருக்கிறார்.

இந்தப் பாபா சாமி, மாணவிகளிடம், "நீ முற்பிறப்பில் கோபிகா. நான் லார்ட் கிருஷ்ணன்" என்று இனிக்க இனிக்கப் பேசி மயக்கி மருவிச் சுகம் காண்பதில் கில்லாடியாம்.

இவர் லீலைகள் புரிந்ததற்கான ஆதாரமும் கிடைத்திருக்கிறதாம்.

ஆனந்த 'ஆபாச'த் தாண்டவம் புரிந்துகொண்டிருக்கும் எஞ்சியுள்ள சில அவதாரங்களும்  உரிய ஆதாரங்களுடன் விசாரித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும் என்பது நம் ஆசை... அல்ல, பேராசை!


============================================================================================= 
காணொலி:

https://youtu.be/nvGlCOnrKhM