அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

ரஜினி மயக்கம்!!!

#நேற்று (செப்டம்பர் 16) முதல் ரஜினி ரசிகர் முரளியின் ட்வீட் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. முரளிக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சமயத்தில் அவருக்குச் சிறுநீரகப் பிரச்சினை இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.

தாம் இனிமேல் பிழைக்க மாட்டோம் என நினைத்த முரளி, தனது ட்விட்டர் பதிவில், "தலைவா, என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவராகவும் தந்தை மற்றும் ஆன்மிக குருவாகவும் வீரநடை போட்டு, அடித்தட்டுக் கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25 ஆயிரம் என்ற நிலையை உருவாக்கிக் கொடு. உங்களை அரியணையில் ஏற்றப் பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம்" என்று பதிவிட்டுள்ளார்#

இவை, 'இந்து தமிழ்'https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/579966-rajini-audio-for-murali.htmlஇல் வெளியான செய்தியின் தொடக்கப் பத்திகள்.

                                *************************************

முரளி விரைவில் குணம் பெற்றிட என் வாழ்த்தினைத் தெரிவிப்பதோடு, என்['பசி'பரமசிவம்] மன வருத்தத்தையும் வெளிப்படுத்திட விரும்புகிறேன்.

"முரளி, சாதனைகள் நிகழ்த்தத் துடிக்கும் இளவட்டம் நீ.  நீ மிகப் பல ஆண்டுகள் வாழ்ந்து, உன்னைப் பெற்றெடுத்தவர்களுக்கும், உற்றார் உறவினருக்கும், தமிழுக்கும், தமிழ் இனத்திற்கும் நீ ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன.

இத்தகைய தலையாய கடமைகளை மனதில் இருத்தி, "மரணத்தை நெருங்க விடமாட்டேன். வாழ்வேன். நூறாண்டு வாழ்வேன்" என்று உறுதிபூண்டிருக்க வேண்டும் நீ. 

நீ கடவுள் நம்பிக்கை உள்ளவனாக இருந்தால்[என்னளவில் அவசியமில்லை], உன் விருப்பத்திற்குரிய கடவுளை மனப்பூர்வமாய் வழிபட்டிருக்க வேண்டும்.

மாறாக,

உலகம் போற்றும் உச்ச நடிகராகவும், உயர் பதவி வகிப்போரின் செல்லப்பிள்ளையாகவும் சுகபோக வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கிற ரஜினியை அரியணையில் ஏற்றாமல் போகிறேனே என்று வருத்தப்பட்டிருக்கிறாய்.

அந்த வருத்தத்தைப் பலருடன் பகிர்ந்துகொண்டிருக்கிறாய்.  

அனுதாபத்திற்குரிய உன் மனநிலை குறித்து மிக மிக வருந்துகிறேன் முரளி.

உன் நிலை குறித்த செய்தியை ரஜினிக்கு நெருக்கமானவர்கள் அவரிடம் எடுத்துக் கூற, அவரும் உனக்குக் 'குரல் பதிவு' ஒன்றை அனுப்பினாராம்.

"முரளி, நான் ரஜினிகாந்த் பேசுறேன். உனக்கு ஒன்றும் ஆகாது கண்ணா. தைரியமாக இருங்க. நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். சீக்கிரம் குணமடைந்து நீங்கள் வீட்டுக்கு வந்துவிடுவீங்க. நீங்கள் குணமடைந்து வந்த பிறகு, ப்ளீஸ் என் வீட்டுக்குக் குடும்பத்தோட வாங்க. நான் உங்களைப் பார்க்கிறேன். தைரியமாக இருங்க. ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன். தைரியமாக இருங்க. தைரியமாக இரு. வாழ்க" என்றிவ்வாறு அதில் பேசியிருக்கிறாராம்.

அவரை அரியணை ஏற்ற விரும்பிய நீ உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிற நிலையில், இந்த அவரின் ஆறுதல் மொழி போதுமா? உனக்கு உதவி ஏதும் செய்யாமல், ஆண்டவனைக் கைக்காட்டியிருக்கிறார் உச்ச நடிகர்[உன்னைப் போல, கொரோனோ நோயாளிகள் பலரும் தன்னை அரியணையில் ஏற்ற நினைத்ததாகச் சொன்னால், எத்தனை பேருக்கு உதவுவது என்று யோசிப்பாரோ என்னவோ?]

தனக்கான அறிவிலும், திறமையிலும் நம்பிக்கை வைக்காமல், தொட்டதுக்கெல்லாம் ஆண்டவனைக் கைகாட்டுகிற இவரையா அரியணையில் ஏற்றக் கனவு கண்டாய்...காண்கிறாய்?

சில நாட்களில் கொரோனாவிலிருந்து விடுதலை பெறவிருக்கும் நீயும் உன்னைப் போன்ற பல இளைஞர்களும்  இனியேனும் நடிகர் ரஜினி மீதான மயக்கத்திலிருந்து விடுபடுதல் வேண்டும் என்பது என் விருப்பம். நம் மக்களின் விருப்பமும் இதுதான்.

===============================================================

Darshan

@Darshan47001815

@rajinikanth தலைவா என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25K என்ற நிலை உருவாக்கி கொடு.உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம்