அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 19 செப்டம்பர், 2020

'செருப்படி' மக்கள் கட்சி!!!

ஏதோ இந்து மக்கள் கட்சியாம். யாரோ 'தர்மா'வாம். அந்த ஆளுதான் அதனோட துணைப் பொதுச் செயலாளராம். திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டாராம்.  அதில் அந்த நபர் பேசும்போது..... 

"அகரம் பவுண்டேசன் என்ற பெயரில் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு இருக்கும் நடிகர் சூர்யா, நீட் விவகாரத்தில் நீதிமன்றத்தை அவமதித்துப் பேசியிருக்கிறார். நடிகர் சூர்யாவை யாரேனும் செருப்பால் அடித்தால் அந்த நபருக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் ரூ1 லட்சம் பரிசு வழங்கப்படும்"னு சொல்லியிருக்கான்ரு. 

[https://tamil.oneindia.com/news/dindigul/neet-row-hindu-outfit-announces-rs1-lakh-reward-for-thrashing-actor-suriya-398000.html]

அத்தனை மூடத்தனங்களையும் ஒட்டுமொத்தமா குத்தகைக்கு எடுத்திருக்கிற இந்தக் கும்பலுக்கு எதிரா அறிவுபூர்வமான கருத்துகளைக் சொன்னால், சிந்தித்துப் பதில் சொல்லத் தெரியாது. "சொன்னவன் நாக்கை அறு. மூக்கை அறு. காதை அறுன்னு சொல்வாங்க. அப்படிச் செஞ்சா லட்சக்கணக்கில் ரூபா பரிசு தர்றதாகவும் அறிவிப்பாங்க[நல்ல வேளை, "குஞ்சை அறுத்துட்டு வா. பரிசு தர்றேன்"னு இதுவரை அறிவிக்கல!].  

இந்த அறுக்கிறது, வெட்டுறது, சீவி எடுக்கிறதெல்லாம் ரொம்ப விவகாரமானதுன்னு இந்தக் கலியுக தர்மர் நினைச்சிருப்பார் போல. அதனாலதான் தன் கட்சித் தொண்டர்களுக்கு, "சூர்யாவைச் செருப்பால் அடிங்கடா"ன்னு உத்தரவு போட்டிருக்கார்.

சூர்யாவைக் செருப்பால் அடிச்சி அவமானப்படுத்தினா, அவர் சொன்ன 'நீட்' தொடர்பான கருத்து அழிஞ்சிடாதுன்னு இந்த ஞானசூன்யத்துக்கு ஏனோ புரியல. புரிஞ்சிருந்தா இப்படியொரு பரிசை அறிவிச்சிருக்க மாட்டார்.

இந்த இந்து மக்கள் கட்சித் துணைப் பொதுச்செயலாளருக்கு நான் வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை.....

"தர்மரே, இப்படியெல்லாம் பேசுற நீங்க ரொம்பப் புனிதமானதுன்னு சொல்லப்படுற இந்து மதத்தைச் சார்ந்தவரா இருக்கிறதுக்கும், 'இந்து' என்னும் சொல்லைப் பயன்படுத்துறதுக்குமான தகுதியை இழந்துட்டீங்க.  உங்களை இப்படிப் பேச அனுமதிச்ச அர்ஜுன் சம்பத்துக்கும் அதற்கான தகுதி இல்ல. அதனால, நீங்க உங்களுடைய கட்சிப் பெயரை, 'செருப்படி' மக்கள் கட்சி'ன்னு மாத்திடுங்க.

இது என் வேண்டுகோள்!

===============================================================

=====================================================================
கலியுக தர்மர்கள் 'பல்டி'!!!

சூர்யாவைச் செருப்பால் அடித்தால் பணம் தருவதாக நான் அறிவிக்கவில்லை.. அர்ஜுன் சம்பத் விளக்கம்
By Veerakumar
| Published: Saturday, September 19, 2020, 15:12 [IST]
சென்னை: நடிகர் சூர்யா மீது செருப்பால் அடித்தால் பணம் தருவதாகத் தான் கூறவில்லை என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு தொடர்பாக, நடிகர் சூர்யா, சமீபத்தில் காட்டமாக ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் நீட் தேர்வை மனுநீதித் தேர்வு என்று சூர்யா குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில்தான் சூர்யாவைச் செருப்பால் அடித்தால் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்ததாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வந்தது