மதிக்கப்படாத பெண்களுக்கான உரிமைகள்; தடைசெய்யப்பட்ட சுதந்திரம்; கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகள்; வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுதல்; கட்டாயப்படுத்தித் திருமணம் செய்தல் என்றிப்படி ஆப்கானிஸ்தான் பெண்கள் பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பது உலக அளவில் பலரும் அறிந்த அவலங்கள் ஆகும்[Women's rights in Afghanistan are not respected: restricted freedom of movement, restrictive dress codes, no protection from violence, forced marriage> https://medicamondiale.org/en/where-we-empower-women/ afghanistan.
* * * * *
உணர்வு சலிக்கும் நேரங்களில், கொள்ளை அழகுக் காட்சிகளை அள்ளித் தெளிக்கும் காணொலிகளைக் கண்டு ரசித்து இன்புறுவது என் வழக்கம்.
அத்தகையக் காணொலிகளுள் ஒன்று கீழ்வருவது.
“அடேங்கப்பா, கற்பாறைகளுக்கிடையே சலசலத்து ஓடும் இந்தச் சிற்றாறுதான் எத்தனை அழகு. ஆப்கானிஸ்தானிகள் கொடுத்துவைத்தவர்கள்[வகை வகையான உணவுகளை உண்டு களித்துக் குதூகளிக்கிறார்கள்]” என்று சிலாகிக்கத் தொடங்கியபோது, ஆப்கானிஸ்தான் பெண்கள்[ஊன்றிக் கவனித்ததில் இரு பெண் உருவங்கள் தென்பட்டன> தெளிவில்லை] என் பார்வையில் படாதது என்னைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
அந்த அதிர்ச்சியிலிருந்து சற்று முன்னர்வரை விடுபட இயலவில்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை.
காணொலி: