வெள்ளி, 4 ஏப்ரல், 2025

‘எபசா’வுக்கும் ‘ஓபசெ’வுக்கும் வரும் 6ஆம் தேதி 'முந்துதல்’ போட்டி! வெற்றி யாருக்கு?

06.04.2025இல் தரணி போற்றும் தன்னிகரில்லாத் தலைவன் இங்கு வருகைபுரிகிறார் என்பதும், மேற்கண்ட இரு ஆயுட்கால அடிமைகளும் அவரைச் சந்திக்கக் காத்திருக்கிறார்கள் என்பதும் ஊடகச் செய்தி.

செய்திக்கு அப்பால்.....

ஓடோடிச் சென்று, மணிக்கணக்கில் காத்திருந்து, தலைவனின் திருவடி தொட்டு முதலில் ஆசி பெறுவது யார் என்பதில் இருவருக்குள்ளும் கடுமையான போட்டி நிலவும் என்பது நம் மக்களின் அனுமானம்.

போட்டியால் தள்ளுமுள்ளும் முட்டி மோதிக்கொள்ளுதலும் நேர்ந்து அது ஊடகங்களால் உலகறியக் காட்சிப்படுத்தப்படும் என்பது 100% நிச்சயம்.

இதன் விளைவாக, இரு பெரும் அடிமைகளும் பெரிதும்  அசிங்கப்படுவார்கள்[தலைவரும் தர்மசங்கடத்துக்கு உள்ளாவார்; கூட்டணி அமைப்பதிலும் இடர்ப்பாடு ஏற்படும்] என்பதால், அதைத் தவிர்க்க.....

இந்த இரு தமிழ்நாட்டு அடிமைகளும்[தமிழர்கள் அல்ல], ஒருவர் தோள் மீது மற்றொருவர் கைபோட்டவாறு இணைந்து சென்று, இணையாக நின்று குனிந்து பணிந்து தலைவனின் தாள் தழுவி ஆசி பெற்றிட அவர் உத்தரவிட்டிருக்கிறாராம். இது செவிவழிச் செய்தி.

வாழ்க அடிமைகளின் ஒற்றுமை! அவர்கள் தங்களின் தலைவனுக்குச் செய்யும் சேவகம் என்றென்றும் தொடர்வதாக!